2025-26 ஆம் கல்வி ஆண்டு வட்டார கல்வி அலுவலர்களுக்கான (BEOs Counselling) பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 851 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி மேற்பார்வையிடுதல்.

2. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பிற பணப்பலன்கள் பெற்று வழங்குதல்.

3. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல்.

4. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒய்வூதிய பணப்பலன்கள் பெற்று வழங்குதல்,

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 20212022 ஆம் கல்வி ஆண்டில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தற்போது 2025-2028ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்வில் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும். இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் 30.06.2025 ல் ஓய்வு பெற இருக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள், தற்போது பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நாளை (08.05.2025) காலை 10.00 மணி முதல்  TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்களின் முன்னுரிமை அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை தயார் செய்யப்பட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கு பட்சத்தில் அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையிலும், முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையிலும் (வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை) பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெயரின் ஆங்கில எழுத்து வரிசையின் படியும் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். மேற்குறிப்பிட்டவாறு ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணிபுரிந்து வரும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கீழ் குறிப்பிட்ட வழிமுறைகளின் அடிப்படையில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

1 20252026ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாநில முன்னுரிமைப்பட்டியலின் படி முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் காலந்தாய்வும் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.

2. மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் முன்னுரிமை அவர்கள் முதன் முதலில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முண்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.

3. ஒரே ஒன்றியங்களில் 30.042025 (crucial date) திலைவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

4. பார்வை இல் கண்டுள்ள அரசாணையில் பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிபவர்கள் தாங்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்த ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பணிநியமனம் வழங்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணையில் தெரிவித்துள்ளவாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கடைசியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்த ஒன்றியங்களை தவிர மற்ற ஒன்றியங்களுக்கு மாறுதலில் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

5. பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னர் பணிபுரிந்த ஒன்றியத்திற்கு மீளவும் மாறுதல் கோரக் கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

20252020 ஆம் கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போதைய ஒன்றியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் 20.062025 வரை ஓய்வு பெற உள்ளவர்களுக்கு கலந்தாய்வில் கலந்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளும். பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் நடத்தப்பட்டு வந்தது. அதே முறையையே பின்பற்றி தற்போதும் முதலில் மாவட்டத்திற்குள்ளும் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டமும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு (30.04.2025) மேல் பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுவதற்கு இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதினை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை கையொப்பமிட்டு Scan செய்து devisection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், 2025-26 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையினை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்தும், வட்டாரக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (EMIS) பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ((தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு:

1. கலந்தாய்வு அட்டவணை - Download Here

2. விண்ணப்பபடிவம் - Download Here


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.