நாளை (08.05.2025) காலை 10.00 மணி முதல் TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு

2024-2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 08.05.2025 அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை 08.05.2025 அன்று காலை 1100 மணிக்கு தங்களது User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Download DGE Proceedings

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.