நாடுமுழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘கியூட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டு முதுகலை பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கைக்கான ‘கியூட்' தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டது.
தேர்வை, நாடுமுழுவதும் 5 லட்சத்து 23 ஆயிரத்து 32 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில், முதுகலை பட்டப்படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை நேற்று இரவு வெளியிட்டது.
மாணவர்கள், https://exams.nta.ac.in/CUET-PG என்ற இணையதளத்தில், கியூட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளலாம்.