தலைவலிக்கு மருந்தாகும் உடற்பயிற்சிகள்
விரிப்பில் நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்களை நேராக நீட்டவும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல், தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
பருவநிலை மாற்றம், வேலைப்பளு, உடல்நலப் பிரச்சினை, உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம், அதீத சிந்தனை, தூக்கமின்மை, நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு தலைவலி உண்டாகலாம். இதற்கு சில எளிய பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.
அதைப் பற்றி இங்கே பார்ப்போம். பயிற்சி 1: கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, முழங்கால்களை மடக்காமல் விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின்பு கைகளை தலைக்குமேல் மெதுவாக உயர்த்தவும். இப்போது இடுப்புப் பகுதியில் அழுத்தம் கொடுத்து, உடலை பின்புறமாக முடிந்தவரை வளைக்கவும்.
இப்போது மூச்சை உள் இழுத்தவாறு குதிகால்களை மெதுவாக உயர்த்தவும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும். பின்னர் மூச்சை வெளிவிட்டவாறு குதிகால்களை கீழே இறக்கி, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். 10 வினாடிகள் இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இப்பயிற்சியை தொடர்ந்து 5 முறை செய்யலாம்.
No comments:
Post a Comment