எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் - Thulirkalvi

Latest

Tuesday 30 January 2024

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்


சென்னை, 

 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

 இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. 

இதனை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது. 

இதற்காகவே சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment