கையெழுத்துப் போட்டி ஈரோடு அரசுப் பள்ளி மாணவிக்கு கலையரசி பட்டம் Handwriting Competition Erode Govt School Student Degree in Arts - Thulirkalvi

Latest

Tuesday 17 January 2023

கையெழுத்துப் போட்டி ஈரோடு அரசுப் பள்ளி மாணவிக்கு கலையரசி பட்டம் Handwriting Competition Erode Govt School Student Degree in Arts

கையெழுத்துப் போட்டி ஈரோடு அரசுப் பள்ளி மாணவிக்கு கலையரசி பட்டம்

அழகிய கையெழுத்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி சிந்துஜாவுக்கு தமிழக அரசின் கலையரசி பட்டம் மற்றும் விருதினை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. 

இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் 50க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் முதல் இடங்களைப் பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்றனா். மாநில அளவிலான போட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாணவா்களுக்கு கலையரசன் என்ற பட்டமும், மாணவிகளுக்கு கலையரசி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

 சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பட்டம் வழங்கினாா். கலைத் திருவிழா போட்டிகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி சிந்துஜா அழகிய கையெழுத்து என்னும் தலைப்பில் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று கலையரசி என்ற பட்டத்தை பெற்றாா். 

 இதையடுத்து மொடக்குறிச்சி ஒன்றிய வட்டாரக் கல்வி அதிகாரிகள் வனிதா ராணி, சிவானந்தம், சுரேஷ் ஆகியோா் மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுதா மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சோ்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

Handwriting Competition Erode Govt School Student Degree in Arts

Sindhuja, a government school student from Erode district, who won first place in the state-level beautiful handwriting competition, was presented with an artistic degree and award by the Tamil Nadu government by Chief Minister M.K.Stalin. Art festival competitions were held to showcase the artistic skills and creativity of government school students across Tamil Nadu.

More than 50 competitions were held under various topics including Physics, Music and Drama. The students who bagged the first positions at the district level participated in the state level art festival competitions. On behalf of the school education department, the title of Kalaiyarasan for male students and Kalaiyarasi title for female students were awarded to the students who won the first places in the state level competitions.

  Chief Minister M. K. Stalin presented the award and degree at a function held recently in Chennai. Arrangements have also been made to take the students of government schools who have secured the top 20 positions in the art festival competitions on foreign tours. Subsequently, Sindhuja, a class 8 student of Panchayat Union Middle School under Modakurichi Panchayat Union, came first in the state level competition on the topic of Beautiful Handwriting and got the title of Artist.

  After this, Modakurichi Union District Education Officers Vanitha Rani, Sivanandam and Suresh congratulated the student. District Resource Superintendent Sudha and Teacher Trainers, Headmistresses, teachers and members of the public congratulated the student.

No comments:

Post a Comment