தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய மானியமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்புAllocation of Rs 3 crore as grant for translation of best books of Tamil language into world languages - Chief Minister's announcement - Thulirkalvi

Latest

Wednesday 18 January 2023

தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய மானியமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்புAllocation of Rs 3 crore as grant for translation of best books of Tamil language into world languages - Chief Minister's announcement

தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய மானியமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்பு

தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை சர்வதேச புத்தக காட்சியின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இலக்கியச் செழுமை மிக்க தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும். உலக அளவில் சிறகை விரித்துள்ளது தமிழ்நாடு. 

சர்வதேச புத்தக காட்சியை சென்னையில் ஆண்டுதோறும் நடத்த வேண்டும். உலகளாவிய அறிவு பரிமாற்றமே சென்னை சர்வதேச புத்தக காட்சியின் நோக்கம். தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் நாள்கள் சர்வதேச புத்தக காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்படும். 

தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் 3 நாள்கள் சர்வதேச புத்தக காட்சி நடைபெற்றுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப் புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு முதல்முறையாக தமிழில் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Allocation of Rs 3 crore as grant for translation of best books of Tamil language into world languages - Chief Minister's announcement

Chief Minister M. K. Stalin has announced that Rs. 3 crore will be allocated to translate the best books of Tamil language into world languages. Speaking at the closing ceremony of the Chennai International Book Fair, Chief Minister M.K.Stalin said: The whole world should bring Tamil works rich in literature. Tamil Nadu has spread its wings globally.

An international book fair should be held annually in Chennai. Global exchange of knowledge is the aim of Chennai International Book Fair. An allocation of Rs.3 crore will be made to translate the best books of Tamil language into world languages. In subsequent years, additional days will be organized to host the International Book Fair.

For the first time in Tamil Nadu, a 3-day international book fair has been held in Chennai, Chief Minister M. K. Stalin said. CM Stalin released 5 medical textbooks translated into Tamil. For the first time textbooks have been published in Tamil for medical students

No comments:

Post a Comment