அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
பார்வையில் காணும் அரசாணைகளின்படி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்விப் பணியில் முன்னேற்றம் காணும் பொருட்டும், பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையினை ஊக்குவிக்கும் பொருட்டும், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலுள்ள 3 சிறந்த பள்ளிகளைத் தெரிவு செய்து மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பார்வை 6ல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் 27.02.2024 நாளிட்ட செயல்முறைகளின்படி பெறப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கு சிறந்த பள்ளிகள் தெரிவுப் பட்டியலின்படி, 2023-24ஆம் ஆண்டிற்கான 38 மாவட்டங்களுக்கு 3 சிறந்த பள்ளிகள் வீதம் 114 கேடயங்கள் சிறந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 14.11.2024 அன்று சென்னை-04. சாந்தோம், சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
தற்போது 2024-25ஆம் ஆண்டிற்கு ஒரு மாவட்டத்திற்கு 3 சிறந்த பள்ளிகளைத் தெரிவு செய்து சுழற்கேடயங்கள் வழங்கிட பள்ளிக் கல்வித் துறை நிருவாக சீரமைப்பு அரசாணைக்கேற்பவும் கீழ்க்காணுமாறு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் மூலம் பள்ளிகளைத் தெரிவு செய்வதற்கான பின்வரும் தெரிவு மதிப்பீட்டு பட்டியலின்படி தரக்குறியீட்டு மதிப்பெண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அரசு/ஊராட்சி /நகராட்சி/மாநகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் தரமதிப்பீட்டில் முதல் மூன்று இடங்களை பெறும் பள்ளிகளே சிறந்த பள்ளிகளாகத் தெரிவு செய்யப்படவேண்டும்.