மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம்: அமைச்சர் உதயநிதி - Thulirkalvi

Latest

Friday 25 August 2023

மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம்: அமைச்சர் உதயநிதி

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவே முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற முதல்வரின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. 

 அதன் அடிப்படையில், ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும் விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.அதனைத் தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-மாணவிகளுக்கு உணவை பரிமாறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment