ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு

0 ThulirKalvi
ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு 
ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு


மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பு எண்.13-இல் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:- "அறிவிப்பு στ σόι.13: ஆசிரியர்களின் வகுப்பறைப் பயன்பாட்டிற்கு கைப்பிரதிப் பாடநூல் வழங்கப்படும். ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழ்ந்து படிப்பதற்கும், அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை உருவாக்கும் பொருட்டும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறைப் பயன்பாட்டிற்கான கைப்பிரதிப் பாடநூல்கள் வழங்குதல். 

One set of textbooks will be provided to Government and Aided school teachers for teaching purposes." 

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பு வரிசை எண்.13-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, "ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழ்ந்து படிப்பதற்கும், அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை உருவாக்கும் பொருட்டும் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறைப் பயன்பாட்டிற்கான கைப்பிரதிப் பாடநூல்கள் வழங்க" அரசின் அனுமதி கோரியுள்ளார். 

3. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பு வரிசை எண்.13-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று, "ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழ்ந்து படிப்பதற்கும். அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை உருவாக்கும் பொருட்டும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறைப் பயன்பாட்டிற்கான கைப்பிரதிப் பாடநூல்கள் வழங்க அனுமதி அளிக்கலாம்" என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.