அலுவலக மீட்டிங்கிற்கு தயாராகும் போது கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்:-
மென்மையான சட்டை
அலுவலகத்தில் நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கு, மென்மையான நிற சட்டைகளை அணிந்து செல்வதுதான் நல்லது. கடுமையான நிறங்களை தவிர்க்கலாம்.
பொருத்தமற்ற பேன்ட்கள்
பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை. பேன்ட் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், அது முழுமையான தோற்றத்தை கெடுத்துவிடும். ஆண்களுக்கான பார்மல் பேன்ட்கள் இடுப்பு மற்றும் நீளத்திற்கு சரியாக பொருந்த வேண்டும்.
காலணி
எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன. அதனால் அலுவலக உடையை நிறைவு செய்ய, முறையான காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும். அலுவலக சந்திப்பு, கலந்துரையாடல் போன்றவற்றுக்கு பார்மல் காலணிகளை மட்டும் பயன்படுத்தலாம்.
தேர்வு
அலுவலக சந்திப்பிற்கு சின்னசின்ன விஷயங்களும் ரொம்ப முக்கியம். குறிப்பாக பெல்ட், நேர்த்தியான கைக்கடிகாரம் மற்றும் பிரீமியம் கப்லிங்க்ஸ் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுத்து அணியுங்கள்.