வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

0 ThulirKalvi
வருமான வரி 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது காலாண்டிற்கான வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


மேற்காண் பொருள் சார்ந்து, பார்வை 1-ல் கண்டவாறு நடத்தப்பட்ட WEBEX கூட்டத்தில், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான 1-வது, 2-வது காலாண்டிற்கான நிலுவையில் உள்ள வருமான வரி பிடித்த அறிக்கையினையும் (Pending TDS Return) உடனே தாக்கல் (Filing) செய்வதற்கான நடவடிக்கைகளை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO's) மேற்கொண்டு (Filing) செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பார்வை 2-ல் கண்ட 18.12.2024 நாளிட்ட செயல்முறைகளில், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு 31.12.2024-ற்கான வருமான வரி பிடித்த அறிக்கை (TDS Return) 25.01.2025-ஆம் தேதிக்குள் கண்டிப்பாக தாக்கல் (Filing) செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டின் 1-வது, 2-வது மற்றும் 3வது காலாண்டிற்கான நிலுவையில் உள்ள வருமான வரி பிடித்த அறிக்கையினையும் (Pending TDS Return) உடனே தாக்கல் (Filing) செய்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 4-வது காலாண்டிற்கான (ஜனவரி முதல் மார்ச் வரை) வருமான வரி பிடித்த அறிக்கையினை தாக்கல் செய்ய இறுதி நாளான 31.05.2025-க்குள் தவறாமல் உடனே தாக்கல் செய்து, அதன் அறிக்கையினை வரும் 05.06.2025-க்குள் DISTAN DEMAND TDS FILING REG.DOCX இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு (dsebudgdetsections@gmail.com) அனுப்பிவைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.