கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க
கால அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு நிறுவனங்களில்
பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-25-ம் ஆண்டு 24-வது அஞ்சல்வழி
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில்
சேர்வதற்காக www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 2.06.2025 வரை
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவு
நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மேலாண்மை பட்டய பயிற்சி பெற
விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்.
கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்-3 கடற்கரை சாலை, சரவணபவா கூட்டுறவு மொத்த
விற்பனை பண்டக சாலை வளாகம், கடலூர்-1 என்ற முகவரியிலோ, அல்லது 04142-222619
என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.