அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் - உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

பள்ளிக் கல்வி அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் தொடர் நடவடிக்கைகள் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு

2024-25 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட 1 ஆம் நாள் நிலவரப்படி அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர் நிர்ணயம் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பணியிடங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் அரசுத் தணிக்கையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை சுட்டிக்காட்டி பல்வேறு தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டுள்ளமை, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளமைகொண்டு 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு நிதி உதவிபெறும் 2024-25 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட 1 ஆம் நாள் நிலவரப்படி அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர் நிர்ணயம் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பணியிடங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் அரசுத் தணிக்கையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை சுட்டிக்காட்டி பல்வேறு தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டுள்ளமை, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு 2024.25 ஆம் கல்வியாண்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மான்யத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

1 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் பள்ளி வாரியாக பாட வாரியாக பதவி வாரியாக இத்துடன் இணைக்கப்பட்ட படிவம் (1)-இல் தயார் செய்யப்படவேண்டும். 2. a) தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் அரசு மான்யம் பெறும் உபரிப் பணியிட டத்தில் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் இளையவர் உபரி ஆசிரியராக கருதப்பட வேண்டும்.

b) பணி நிரவல் செய்யப்படவேண்டிய இளைவர் குறைந்தபட்சம் 40 சதவீதம் விழிதிறன் குறைபாடு உடையவர் எனில் அவருக்கு பணிநிரவலில் விலக்களித்து அவருக்கு அடுத்த பணிமூப்பு நிலையில் உள்ள இளையவர் உபரி ஆசிரியாகக் கருதப்பட்டு பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.

c) பணிநிரவல் செய்யப்பட வேண்டிய இளைய ஆசிரியர் அப்பள்ளியின் NCC அலகிற்கான தேசிய மாணவர் படையின் Associate NCC Officer (ANOs) ஆக பணிபுரிந்துவரின் அவருக்கு பணிநிரவலில் விலக்களித்து அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இளையவரை பணிநிரவல் செய்ய வேண்டும்.

d) பணிநிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர் 2024-25-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் பணி ஓய்வு பெறுபவர் எனில், அன்னார் பணி ஓய்வு பெற்றவுடன் அப்பணியிடம் இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

3.கூட்டு மேலாண்மைப் பள்ளிகளைப் பொறுத்த வரையில், தங்கள் மேலாண்மையின் கீழ் உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அம்மேலாண்மையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்களால் 2024.25 ஆம் கல்வியாண்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி, அரசு மான்யம் பெற தகுதியான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில், பணி நிரவல் மூலம் பணி மாறுதல் ஆணையினை தொடர்புடைய கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். இப்பணிநிரவல் நடவடிக்கைகள் எதிர்வரும் 15.05.2025 க்குள் நிறைவு செய்து. 2024 25 ம் கல்வியாண்டின் இறுதி நானில் சார்ந்த ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கூட்டு மேலாண்மை முகவாண்மையும் தங்களது நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்துப் பள்ளிகளுக்குமான பணியாளர் நிர்ணய ஆணையின் நகல். பணியாளர் நிர்ணய ஆணையின்படி உபரி எனக் கண்டறியப்பட்ட அரசு மான்யத்தில் ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள் விவரம், அவர்களுக்கு நிர்வாகத்தின் மூலம் பணிநிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் (2:B)) இல் பூர்த்தி செய்து தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் எதிர்வரும் 18.05.2025 க்குள் ஒப்படைக்க வேண்டும்.

5 கூட்டு மேலாண்மை முகவாண்மைகளிடமிருந்து பெறப்படும் பணிநிரவல் அறிக்கையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிசீலனை செய்து குறிப்பிட்ட கூட்டு மேலாண்மையின் கீழ் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் உபரி ஆசிரியர்கள் முறையாக பணி நிரவல் செய்யப்பட்டுள்ளார்களா என்பதனை உறுதிப்படுத்தி தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் விதிகளின்படி பணிவிடுவிப்பு: பணியேற்பிற்கு உடன் ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும் இவ்வாறு பணிநிரவல் செய்யப்பட்ட விவரங்கள் EMIS இணையதளத்தில் தொடர்புடைய மாவட்டத்தின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 19.05.2025க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6 மேலும், தனித்த சிறுபான்மை அரசு நிதி உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் உபரி ஆசிரியர்களை அதே வகையிலான (மதவாரியான மொழிவாரியான | பிற சிறுபான்மைப் பள்ளிகளில் அக்கல்வியாண்டிற்குரிய பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அனுமதிக்கப்பட்ட நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்களில் பள்ளி நிர்வாகத்தின் இசைவின் அடிப்படையில் பணி நிரவல் நடவடிக்கை செய்திட தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் இப்பணிகளை எதிர்வரும் 23052025 குள் நிறைவு செய்திட ண்டும் இவ்வளற. பணிநிரவல் செய்யப்படும் ஆசிரியர்கள் இக்கல்வியாண்டில் இறுதி வேலை நானில் பணிநிரவல் செய்யப்பட்ட புதிய பள்ளியில் பணியேற்கும் வகையில் பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும்

7. மேற்கண்டுள்ளவாறு கூட்டு மேலாண்மை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிநிரவல் மற்றும் தனித்த சிறுபான்மை பள்ளிகளின் நிர்வாகங்களின் இசைவின் அடிப்படையிலான பணிநிரவல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஞ்சியுள்ள அனைத்து உபரி ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் 2024.25-ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணய ஆணையின்படி தற்போது காலியாக உள்ள 3105.2025 நிலவரப்படி பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலியேற்படும் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 19.05.2025 க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்டத்திற்குள் பணி நிரவல் கலந்தாய்வு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 2025 மே கலந்தாய்வு இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்திற்குள் பணிநிரவல் நடத்திடவும்.அதனைத்தொடர்ந்து அரசாணை (நிலை) 6t ador 146 பள்ளிக்கல்வித்ப1|துறை நாள். 236.2024 ல் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் படி தொடர் பணிநிரவல் நடவடிக்கைகள் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்விவரங்கள் அனைத்தும் EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

உபரி ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மான்யம் பெறும் பணியிடத்தில் தற்போது வகித்துவரும் பதவியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் கல்வி மாவட்ட அளவில் முதலிலும் அதனைத்தொடர்ந்து வருவாய் மாவட்ட அளவில் கலந்தாய்வு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி வருவாய் மாவட்டத்திற்குள் பணிநிரவல் நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூட்டு மேலாண்மைப் பள்ளி நிர்வாகம் பணிநிரவல் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய பள்ளி நிர்வாகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு படிவம் A B&Cமற்றும் 2A B&C)

Download DSE Proceedings

(இவ்விவரங்களை பூர்த்தி செய்து 10.5.2025 க்குள்சமர்பித்திட்ட கேட்டுகொள்ளப்படுகிறது!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.