பள்ளிக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப்பணி உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு 15.03.2025 அன்றுள்ளவாறு உதவியாளர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - சார்ந்து.
2.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 086430/93/01/2024. 31.12.2024
3. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வரும் பிற தலைமை அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்.
பார்வை (2) இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளுக்கிணங்க, பார்வை (3) ல் குறிப்பிட்டுள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வரும் பிற தலைமை அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு உதவியாளர்களின் (29.04.2025 அன்று நடைபெற்ற கலந்தாய்வு நிறைவில் மீதமுள்ள 22 உதவியாளர்களின் பெயர்களை சேர்த்து) உத்தேச பெயர்ப்பட்டியல் (15.03.2013 மற்றும் 15.03.2014 நிலவரப்படி உதவியாளர் TNPSC Group IV 2009 Special Competitive Examination வரையிலும், அதேபோல் பிற நியமனங்களில் 17.08.2010 முதல் இளநிலை உதவியாளர் / தட்டச்சராக நியமனம் பெற்று வரன்முறை செய்யப்பட்டவர்கள்) 15.03.2025 அன்றுள்ளவாறு உத்தேசமாகத் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இப்பெயர்ப்பட்டியலை தங்களது ஆளுகைக்குட்பட்ட சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனைக்காலம் நிலுவையிலுள்ளவர்கள் மற்றும் மாறுதலில் சென்றவர்கள், தகவலின்றி நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்கள். ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பதவி உயர்வினை தற்காலிக/நிரந்தர உரிமைவிடல் செய்தவர்கள் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை உடன் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் / இயக்ககங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 2. இவ்வுத்சேத பெயர் பட்டியலில் மேலே பத்தி 1 இல் தெரிவிக்கப்பட்டவாறு தகுதிகள் பெற்றிருந்து உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றவர் பெயர் விடுபட்டிருப்பின் அதனை ஏற்கனவே 31.12.2024 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பிவைக்கப்பட்ட படிவத்தில் தனியரின் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து ஆய்வு செய்யத் தேவையான அனைத்து இணைப்புகளை படிவத்துடன் இணைத்து முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரையுடன் அனுப்பிவைத்தல் வேண்டும் மேலும், சம்பந்தப்பட்ட உதவியாளரை முதன்மைக் கல்வி அலுவலகம் அழைத்து உத்தேச பட்டியலை சரிபார்க்க முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அலுவலக நகலாக பராமரிக்கப்பட்டுவரும் சம்பந்தப்பட்ட உதவியாளரின் கருத்துருவின் அடிப்படையில் உத்தேச பட்டியலில் கலம் 1 முதல் 12 வரையுள்ள அனைத்து விவரங்களையும் (Including FN and AN) சரிபார்த்து திருத்தங்களை அளித்தல் வேண்டும். தொடர்புடைய உதவியாளரிடம் ஒப்பம் பெற்று மாவட்டஅளவில் கோப்பினை பராமரித்தல் வேண்டும். திருத்தம் / நீக்கம் கோரும் நிகழ்வுகளில் தொடர்புடைய ஆவணங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனுப்பிடல் வேண்டும். சேர்க்கை, திருத்தம் மற்றும் நீக்கம் ஏதுமில்லையெனில் இன்மை அறிக்கையினை தவறாது அனுப்பிடல் வேண்டும். இச்செயல்முறைகளைப் பெற்றக்கொண்டமைக்கு ஒப்புதலினை உடன் அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி கோரப்பட்ட விவரங்கள் (அ) இன்மை அறிக்கை 14.05.2025 க்குள் இவ்வியக்ககம் கிடைக்கப்பெறுதல் வேண்டும்.
3. அனைத்து மாவட்டங்கள், தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்களில் தகுதிவாய்ந்தவர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் விடுதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்து தெரிவிக்கப்படுகிறது. கொள்ள