தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2025க்கு பதிவு செய்யும் முறை

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2025க்கு பதிவு செய்யும் முறை

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025 (TNEA 2025) முழுமையாக இணைய வழி விண்ணப்பபதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமைந்துள்ளது. விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல். பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவுசெய்தல், தற்காலிக இடஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், இறுதி இடஒதுக்கீட்டு ஆணையை பெறுதல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும். சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள "தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில்" (TFC) இணையவழியாக விண்ணப்பதாரர்களை நேரில் அழைக்காமல் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எல்லா செயல்களையும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதள வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், எல்லா சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும்.

முழுமையான இணையவழி கலந்தாய்வு கீழ்க்காணும் பல அடுத்தடுத்த கட்டங்களைக் கொண்டது.

1 விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல்

2. சமவாய்ப்பு எண் (Random Number) உருவாக்குதல் (by TNEA Authority)

3. பொறியியல் சேர்க்கை உதவிமையத்தில் இணையவழியாக சான்றிதழ் சரிபார்த்தல் (by TNEA Authority)

4. தரவரிசை வெளியிடுதல் (by TNEA Authority)

5. விருப்பமான கல்லுாரிகளையும் மற்றும் பாடப்பிரிவுகளையும் பதிவு செய்தல்

6. குறிப்பிட்ட நாளில் தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல் (by TNEA Authority)

7. இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் (by Candidate)

8. கல்லூரியிலோ அல்லது பொறியியல் சேர்க்கை உதவிமையத்திலோ(TFC) கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்தி உறுதி செய்தல்

விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள எல்லா விபரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்குமான முதற்படி. விண்ணப்பத்தை பதிவு செய்தல் அதை எவ்வாறு செய்வது என்பதை இந்த குறிப்பு விவரிக்கிறது. விண்ணப்பத்தைப் பதிவு செய்ய என்னென்ன விவரங்கள் வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தும் விபரப்படிவம் (Data Sheet), TNEA இணைய தளத்தில் கிடைக்கும். அதைப் பதிவிறக்கம் செய்து அதில் விபரங்களைப் பூர்த்தி செய்த பின் கணினியில் விவரங்களை வரிசையாக உள்ளீடு (Input) செய்தால், விரைவாகவும் சரியாகவும் செய்து முடிக்கலாம். TNEA உதவி மையத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னரே கணினியில் பதிவு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்தல்

விண்ணப்ப பதிவை ஆரம்பிக்கும் முன். மாணவர்கள் கீழ்கண்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

1. அலைபேசி எண் (தங்களது அல்லது தங்களது பெற்றோருடையது)

2. மின்னஞ்சல் முகவரி (இல்லையெனில் புதிதாக உருவாக்கவும்)

3. கடன் அட்டை / பற்று அட்டை | இணையத்தின் வழிசெலுத்தும் விவரங்கள் (அல்லது)

வரைவு காசோலை THE SECRETARY, TNEA என்ற முகவரியில் CHENNAI மாற்றத்தக்க வகையில் இருத்தல் வேண்டும். 25

இப்போது நாம் விண்ணப்பம் பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

விண்ணப்பபதிவின் படிகள்:

1. User Registration( பயனாளர் பதிவு)

2. Login (உள் நுழைதல்)

3. Personal Information (क )

4. Special Reservation Information (சிறப்பு இடஒதுக்கீடு விவரங்கள்)

5. Scholarship Information (உதவித் தொகை விவரங்கள்)

6. School of Study Information( )

7. Academic Information (கல்வித் தகுதி தகவல்கள்)

8. Preview Application and Change Information( மாற்றுதல்)

9. Payment of Registration fees (விண்ணப்பதிவு கட்டணம் செலுத்துதல்)

10. Download Application in PDF (விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தல்)

11. Certificate Upload (அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல்)

பதிவு செய்தலை எளிதாக்க, அது பல எளிய வழிமுறைகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வழிமுறைகளை கவனமாக தொடருங்கள். முதலாவதாக www.tneaonline.org என்கிற TNEA இணையதளத்திற்கு செல்லவும். தற்பொழுது நீங்கள் கீழேகாணும் கணினி பக்கத்தை காண்பீர்கள்

தொடர்ந்துப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.