பூமியை போன்ற கிரகம்
பூமியை விட்டு வேறு கிரகங்களில் வாழ முடியுமா? என்பது குறித்து ஆராய்ச்சி ெவகுகாலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், பூமியை போன்று அளவில் பெரிய ஒரு கிரகம் இருப்பது தெரியவந்துள்ளது.
‘கே2-18 பி’ என்று பெயரிடப்பட்ட இது பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த கோளில் உயிர் வாழ தேவையான தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
வளி மண்டலத்தை ஆய்வு செய்து வரும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சமீபத்தில் எடுத்த விரிவான ஒளியியல் பதிவுகள் ‘கே2-18 பி’ கோளின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்கள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளன.
அதே வேளையில், இதன் ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தில் பெரும் ஆழமான நீர் காணப்படும் கடல் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பொதுவாக, பூமியில் காணப்படுவது போன்ற பல வாயுக்கள் இந்த புதிய கோளிலும் காணப்படுவதால் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கே2-18 பி கோளின் வளிமண்டலத்தில் அதிக அளவில் ஹைட்ரஜன் காணப்படுவதுடன், அதன் மேல் அடுக்குகளில் குளிர் உறைவு பகுதி காணப்படுவது புகைப்படங்களில் தெரியவந்துள்ளதாம்.
இந்த கோளின் புற நட்சத்திரங்களானது, புற ஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ் கதிர்வீச்சுகளை வெளியிடுவதால், இதன் வளிமண்டலம் மெதுவாக ஆவியாகும் அபாயமும் உள்ளது. இப்படி ஆவியாகும் நிலை காணப்பட்டால் ஒரு கோள் குறிப்பிட்ட காலகட்டத்தில் அழிந்துவிடும் அபாயமும் உள்ளது.
ஆனால், இந்த கோளில் உள்ள வாயு மண்டலம் முழுமையாக நீங்கும்முன், இந்த கோள் சுமார் 100 கோடி ஆண்டுகள் நிலைத்து இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Earth-like planet
Is it possible to live on other planets other than Earth? Research has been going on for a long time. In this situation, it has been revealed that there is a planet as large as Earth. It has been named ‘K2-18b’ and is 120 light-years away from Earth. Scientists have said that there is a high possibility of the presence of water necessary for life on this planet. The detailed optical records recently taken by the James Webb Space Telescope, which is studying the atmosphere, have confirmed the presence of methane and carbon dioxide gases in the atmosphere of the planet ‘K2-18b’.
At the same time, it is believed that there may be a deep ocean of water in its hydrogen-rich atmosphere. In general, researchers believe that there are many gases found on Earth, so there is a high possibility of life on this new planet. The atmosphere of the planet K2-18b is rich in hydrogen, and the photos have revealed that there is a cold frozen region in its upper layers.
The planet's outer stars emit ultraviolet and X-rays, which could cause its atmosphere to slowly evaporate. If this evaporation occurs, a planet could be destroyed over a period of time. However, researchers have said that the planet could survive for about 1 billion years before the gas layer on the planet is completely removed.