போட்டோவை வீடியோவாக மாற்றும் - ஜெமினி வியோ 3 | Gemini Vio 3’ that turns photos into videos

0 Admin
போட்டோவை வீடியோவாக மாற்றும் ‘ஜெமினி வியோ 3’ 
போட்டோவை வீடியோவாக மாற்றும் - ஜெமினி வியோ 3 | Gemini Vio 3’ that turns photos into videos
thanks to meta AI

ஏ.ஐ. யுகத்தில், நம் ஸ்மார்ட்போனில் தென்படுவது, உண்மையா? அல்லது ஏ.ஐ. மாயாஜாலமா..? என்ற சந்தேகம் இருக்கக்கூடும். அந்த சந்தேகத்தை கிளப்பிய ஏ.ஐ. வீடியோ கிரியேஷன் ஆப்களில், கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி வியோ 3’-யும் ஒன்று. ஆம்..! இந்த ஆப்பில், நீங்கள் ஒரு போட்டோவை கொடுத்து, அதை உயிரோட்டமான வீடியோவாக மாற்றலாம். ஆம்..! உங்கள் போட்டோவை வீடியோவாக மாற்றும் மாயாஜாலத்தை அறிந்து கொள்வோமா... 

ஜெமினி வியோ 3: 

கூகுள் ஜெமினி மொபைல் ஆப் அல்லது ஜெமினி வெப்சைட் ஆப் இதில் ஏதாவது ஒன்றை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் கூகுள் ஏ.ஐ. ப்ரோ (Google AI Pro) அல்லது கூகுள் ஏ.ஐ. அல்ட்ரா (Google AI Ultra) ஆகிய சந்தா (Subscription) இருந்தால் மட்டுமே இந்த போட்டோ டூ வீடியோ பீச்சர் (Photo To Video Feature) பயன்படுத்த கிடைக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். போட்டோ பதிவேற்றம்: ஜெமினி ஆப்-ஐ ஓப்பன் செய்த பிறகு ‘ப்ராம்ப்ட்’ பாக்ஸ் தோன்றும். அதன் வலது பக்கத்தில் பிளஸ் (+) ஐகான் இடம் பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால், கேமரா மற்றும் கேலரி போன்ற ஆப்ஷன் இருக்கும். இதில் நீங்கள் வீடியோவாக மாற்ற வேண்டிய போட்டோக்களை தேர்ந்தெடுத்து அப்லோட் செய்து கொள்ளுங்கள். அப்லோட் முடிந்த பிறகு ‘ப்ராம்ப்ட்’ கொடுக்க வேண்டும். 

ப்ராம்ப்ட் கொடுங்கள்: 

உங்களது போட்டோவை அடிப்படையாக கொண்டு உருவாக்க விரும்பும் வீடியோ பற்றிய விளக்கத்தை ‘ப்ராம்ப்ட்’ பாக்ஸில் விரிவாக கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு அட்டை பெட்டியின் போட்டோவை அப்லோட் செய்து விட்டு, அதில் இருந்து லிப்ட் மேலே வருகிறது என்று கொடுத்தால், அதேபோல 8 செகண்ட்களுக்கு வீடியோ ‘ஜெனரேட்’ செய்து கொடுக்கப்படும். இதேபோல அந்த அட்டை பெட்டிக்குள் மினி நகரம் இருக்க வேண்டும் அல்லது சிறிய பொம்மை படகு தண்ணீரில் மிதக்க வேண்டும் என்று எந்தவித ப்ராம்ப்ட்டை கொடுத்தாலும், உங்களுக்கு 8 செகண்டுகளுக்கான வீடியோ தயார் செய்து கொடுக்கப்படும். இப்படி உங்களது பல்வேறு போட்டோக்களை அப்லோட் செய்து, அதற்கு ஏற்ப ‘ப்ராம்ப்ட்’ கொடுக்கலாம். 

ஆடியோ ஆப்ஷன்: 

போட்டோவில் இருந்து வீடியோவை உருவாக்கும்போது, உங்களுக்கு ஆடியோ வேண்டுமானாலும் அதையும் ‘ஜெனரேட்’ செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு சோபாவை போட்டோ எடுத்து, அதை அப்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போது, ப்ராம்ப்ட் செய்யும்போது, அதில் ஒரு பூனை தூங்குகிறது. அது குறட்டை விடுகிறது என்றும் கொடுக்கலாம். அதேபோல அந்த பூனையின் கலர், உடல்வாகு, கண்கள் போன்ற எந்தவித கூடுதல் ஜெனரேஷனுக்கும், விரிவான ‘ப்ராம்ப்ட்’ கொடுத்தால் போதும். உங்களுக்கு வீடியோ உருவாக்கி கொடுக்கப்படும். இப்படி பல்வேறு யோசனைகளுக்கு ஏற்ப போட்டோக்களை வீடியோக்களாக மாற்றிக்கொள்ளலாம். இது கிரியேட்டர்கள் மட்டுமல்லாமல், சாதாரண பயனருக்கும் பயன்படுத்த சுலபமாக இருக்கும். மேற்கண்ட முறையில் போட்டோக்களை மாற்றுவது மட்டுமல்லாமல், ஒரு போட்டோ மூலம் டைம்-லேப்ஸ், ஏரியல் ஷாட் போன்ற வீடியோக்களையும் உங்களால் உருவாக்க முடியும். அதாவது, ஒரு சூரிய உதயத்தை போட்டோ எடுத்துவிட்டு அது உதித்துக்கொண்டே மேலே வரும்படி உங்களால் வீடியோவை உருவாக்க முடியும். இப்படி, ஏராளமானவை இருக்கின்றன.

Gemini Vio 3’ that turns photos into videos

In the age of A.I., is what we see on our smartphones real? Or is A.I. magic..? There may be a doubt. One of the AI ​​video creation apps that has raised that doubt is Google’s ‘Gemini Vio 3’. Yes..! In this app, you can give a photo and turn it into a lively video. Yes..! Let’s learn the magic of turning your photo into a video...

Gemini Vio 3:

Open either the Google Gemini mobile app or the Gemini website app. Remember that this Photo To Video Feature is available only if you have a Google A.I. Pro or Google A.I. Ultra subscription. Photo Upload: After opening the Gemini app, a ‘prompt’ box will appear. There will be a plus (+) icon on its right side. If you click on it, there will be options like camera and gallery. In this, select the photos you want to convert into a video and upload them. After the upload is complete, you need to give a ‘prompt’.

Give a prompt:

You need to give a detailed description of the video you want to create based on your photos in the ‘prompt’ box. For example, if you upload a photo of a cardboard box and give it a lift coming up from it, a video for 8 seconds will be ‘generated’. Similarly, if you give any prompt such as a mini city inside the cardboard box or a small toy boat floating in water, you will be given an 8-second video. In this way, you can upload your various photos and give a ‘prompt’ accordingly.

Audio option:

When creating a video from a photo, you can also ‘generate’ audio if you want. For example, take a photo of a sofa and upload it. Now, when prompted, a cat is sleeping on it. You can also give it a snore. Similarly, for any additional generation of the cat’s color, body shape, eyes, etc., you just need to give a detailed ‘prompt’. The video will be generated for you. In this way, you can convert photos into videos according to various ideas. This will be easy to use not only for creators but also for ordinary users. In addition to converting photos in the above way, you can also create videos like time-lapse, aerial shot, etc. from a photo. That is, you can take a photo of a sunrise and create a video of it rising up. There are many like this.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.