மழையில் வாகனம் வழுக்குவது ஏன்? 
மழை பெய்யும் நேரத்தில் வாகனங்களை ஓட்டும்போது, டயர்கள் சாலையில் இறுக்கமான பிடிமானம் இல்லாமல் நகர்வதை உணர முடியும். இதற்கு காரணம், டயர்கள் மற்றும் சாலையின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் மெல்லிய நீர் படலம்தான்.
மழைநீர் சாலையில் வழிந்தோடும்போது வாகனம் சாலையின் மீது இயங்குவது போல தெரிந்தாலும், உண்மையில் அது கண்ணுக்கு தெரியாமல் உருவாகும் இந்த நீர் படலத்தின் மீதுதான் நகர்கிறது. 
இதை ‘ஹைட்ரோபிளேனிங்’ என்று அழைக்கிறார்கள்.
இதன் காரணமாக, சாலையில் பிடிமானம் இன்றி வாகனம் அதிக வேகத்தில் செல்லும் போது ஸ்டீயரிங் கட்டுப்பாடு, பிரேக்கிங் திறன் குறைந்து வழுக்கி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது.
சாலையில் அதிக பிடிமானத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட டயர்கள் உள்ளன. 
இந்த வகை டயர்களில் ஆழமான, நுண்ணிய கோடுகள் கொண்ட டிரெட் வடிவமைப்பு, சாலையை டயர் தொடும் போது டயரின் கீழ் பெருக்கெடுக்கும் நீரை வெகு வேகமாக வெளியேற்றி சாலையில் பிடிமானத்தை உறுதி செய்கின்றன.
டிரெட்டில் உள்ள ரேகைகள் மற்றும் கோடுகள் நீரை டயரின் மையப்பகுதியில் இருந்து பக்கங்களுக்கு தள்ளி, ரப்பர் பாகம் சாலையை நேரடியாகத் தொடுமாறு செய்து விடுகின்றன.
Why Vehicles Lose Grip in the Rain
Vehicles lose traction on wet roads due to a phenomenon known as hydroplaning, where a layer of water builds up between the tires and the road surface. Even though it may seem like the car is in contact with the pavement, it's actually riding on a thin sheet of water, reducing friction significantly.
When this happens, especially at higher speeds, the tires can no longer channel water effectively, leading to a loss of steering control, reduced braking efficiency, and an increased chance of skidding or collision. To minimize such risks, it's essential to reduce speed during rainfall and maintain proper tire condition.
Modern tire designs help combat this issue through advanced tread patterns. Tires engineered for wet conditions feature deep grooves and sipes—small slits in the tread blocks—that actively displace water from beneath the tire. These channels push water outward from the center to the edges, allowing more rubber to maintain direct contact with the road surface, enhancing grip and stability in wet weather.