பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2025

0 Admin
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2025 

ஐக்கிய நாடுகள் நாள் 

திருக்குறள்: குறள் 978: பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. உரை: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும். 

பழமொழி : No effort, no harvest. முயற்சி இல்லாமல் விளைச்சல் இல்லை. 

இரண்டொழுக்க பண்புகள் : 

 1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும். 

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன் 

பொன்மொழி : அழகே உண்மை .உண்மையே அழகு - கீட்ஸ் 

பொது அறிவு : 

01.தாவரங்களின் வளர்ச்சி நிலையை அறிய பயன்படும் கருவியின் பெயர் என்ன? ஆக்ஸனோமீட்டர்-வளர்ச்சிமானி Auxanometer 

 02. நமது உடலில் இன்சுலினை சுரக்கும் சுரப்பி எது? கணையம் - Pancreas English words : destroy-ruin devote-dedicate 

தமிழ் இலக்கணம்: காலப்பெயர்: ஓர் காலத்தைக் குறிக்கும் பெயர். எடுத்துக்காட்டு: காலை, மாலை, ஆண்டு. சினைப்பெயர்: ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர். எடுத்துக்காட்டு: கண், கை, இலை, பழம் 

அறிவியல் களஞ்சியம் : பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. 

அக்டோபர் 24 உலக இளம்பிள்ளை வாத நாள் இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. 

ஐக்கிய நாடுகள் நாள் 1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது. 1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது. ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது. 

நீதிக்கதை 

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார். 

 நீதி : கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம். 

இன்றைய செய்திகள் 24.10.2025 

 ⭐தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு- தமிழக அரசு அனுமதி 

 ⭐சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார்- தமிழக அரசு 

 ⭐ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 
 ⭐உக்ரைன் போர் விவகாரம்: 
2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதாரம் தடை 

 🏀 விளையாட்டுச் செய்திகள் 

 🏀மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம்- ஸ்மிருதி மந்தனா சாதனை. நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார். 

 Today's Headlines 

 ⭐ Tamilnadu government has approved to provide three free meals every day for sanitation workers . ⭐1436 motor pumps and 298 vehicles have been made ready to prevent rainwater from accumulating in Chennai

 ⭐Chief Minister M.K. Stalin will open the renovated Tolkappiyam Park for public use today at the cost of Rs. 42.45 crore. 

 ⭐Ukraine war issue: US imposes economic sanctions on 2 Russian oil companies. 

 SPORTS NEWS

 🏀 Mandhana scored 109 runs in today's match against New Zealand. Smriti Mandhana holds the record for scoring the most centuries in women's ODIs.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.