செயற்கை நுண்ணறிவுப்பற்றி தெரிந்து கொள்வோம்

0 Admin
செயற்கை நுண்ணறிவுப்பற்றி தெரிந்து கொள்வோம்  


மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய சிக்கலான பணிகளை, மனிதர்களைவிட மிகவும் விரைவாகவும் எளிதாகவும் செய்யும் கணினி செயல்பாட்டு திறனை செயற்கை நுண்ணறிவு என்று கூறலாம். ஆங்கிலத்தில் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் அல்லது 'ஏ.ஐ.' என்கிறார்கள். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனுக்கு உதாரணமாக சிலவற்றை கூறலாம். தற்போது, புழக்கத்தில் உள்ள சாட் ஜி.பி.டி. என்பது எந்தவிதமான கேள்விகள் அல்லது கருத்துகளுக்கு ஒரு சில வினாடிகளில் விரிவாக பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு தளம் ஆகும். இதே போல, கூகுள் மொழிபெயர்ப்பு சேவை என்பதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மற்றொரு சான்று. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு உரையை தெளிவாக, மொழிபெயர்க்க ஆழமான கற்றல் வழிமுறைகளை வௌிப்படுத்துகிறது. இதனை பயன்படுத்தி உலகின் எந்த மொழியையும் புரிந்து கொள்ள முடியும். இன்றைக்கு, பல்வேறு தொழில்களில் செயற்கை நுண்ணறிவு பரவலாக பயன்பாட்டில் உள்ளது. 

இதற்கு, பண பரிமாற்ற சேவையை உதாரணமாக கூறலாம். மருத்துவம் மற்றும் சுகாதார துறையிலும் பயன்பாட்டில் உள்ளது. ரத்த இழப்பு அல்லது தொற்று அபாயத்தை குறைக்க மிகவும் மென்மையான உறுப்புகள் அல்லது திசுக்களுக்கு அருகில் அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பான முறையில் செய்ய உதவுகிறது. இது போன்ற மேம்பட்ட திறன்களை கொண்ட செயற்கை நுண்ணறிவு திறனை வலுவான ஏ.ஐ. என்கிறார்கள். மொபைல் போனில் சதுரங்கம் விளையாடுவது, பாடல்களை பரிந்துரைப்பது அல்லது கார்களை இயக்குவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இலகுவான ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஏ.ஐ.தான் மனித செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.