மாண்புமிகு வீட்டுவசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி அவர்கள் இன்று
(12.02.2025) செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக,
ஏறத்தாழ 35-40 ஆண்டுகளுக்கு முன்பு இடங்கள் எடுக்கப்பட்டு, அவைகளில் வீடு
கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
அப்படி எடுத்த
முயற்சியில் ஆரம்ப கட்டப் பணிகள் மட்டும் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது forum
notice கொடுப்பது மட்டும் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னால் எந்தவித
நடவடிக்கையும் அதில் எடுக்கப்படவில்லை. இந்த மனுக்கள் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களுக்கு வந்தபோது, இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற
சிரமங்களை சரி செய்து கொடுங்கள் என்று எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். இதில்
குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் forum notice கொடுத்த பின்னால், அந்த forum notice
கொடுத்திருக்கின்றோம் என்ற செய்தி பொது மக்களுக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால்,
ஏறத்தாழ 30 ஆண்டு காலத்திற்கு முன்பு அதையெல்லாம் பிரித்து, சிறிய சிறியதாக மிகச்
சாதாரணமான மக்களுக்கு அதை விட்டுவிட்டார்கள்.
எனவே, இப்போது அவர்கள்
பாதிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துதான் மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று
எங்களுக்கு சொன்னார்கள்.அதுமட்டுமல்ல, வீட்டுவசதி வாரியத்திற்கும் எந்த நஷ்டமும்
அதில் வந்துவிடக்கூடாது. அதில், இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்து சரியான நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
எனவே, இந்த மாதிரியான
குறைகள் யார் யாருக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக நாங்கள் வாரியத்தின்
சார்பாக, 16 இடங்களில் புகார் பெட்டிகளை வைத்தோம். அந்த புகார் பெட்டியில் வந்த
புகாரை அடிப்படையாகக்கொண்டு அந்தக் கோரிக்கைகளை பிரித்து எடுத்துப் பார்த்தபோது,
இதை வாரியமே ஒரு நடவடிக்கை எடுப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்ற காரணத்தால்,
அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கவேண்டும்.
அந்தக் குழு அதனுடைய பரிந்துரையை
கொடுக்கவேண்டும். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லப்பட்டது. இந்த
நிலங்கள், இதுவரை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வீட்டுவசதி வாரியம் எடுத்திருக்கின்ற
வரி, இதையெல்லாம் ஆய்வு செய்து பார்க்கின்றபோது இதுவரை ஐந்து category-ஆக அதை
பிரித்தார்கள். அதுமட்டுமல்லாமல், ஏறக்குறைய 10000 ஏக்கர் ஒரு 30 ஆண்டு காலத்திற்கு
முன்பே இதையெல்லாம் எதிர்காலத்தில் எடுக்கலாம் என்று ஒரு திட்டமிடப்பட்டிருக்கிறது.
எனவே, இன்றைக்கு அதிகாரிகள் எடுத்தால், அதற்கு நோட்டீஸ் கொடுக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு பாதிப்பும் இருந்தது. ஆனால், 30 ஆண்டு காலத்திற்கு முன்னால் என்ற
காரணத்தால், அன்றைக்கு இருந்த நிலத்தின் நிலை இன்றைக்கு இல்லை.
அதுபிரிக்கப்பட்டிருக்கிறது. வீடு கட்டப்பட்டிருக்கிறது. எனவே அந்தத் திட்டம்
இன்றைக்கு பொருத்தமாக இருக்காது என்ற காரணத்தால், அந்த 10000 ஏக்கர் எடுக்கப்
போவதில்லை என்று முடிவு செய்து ஒரு சுற்றறிக்கையின் மூலமாக அது
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மீதமிருப்பதை ஐந்து category-ஆக பிரித்திருக்கிறார்கள்.
அதில் ஒன்று, இரண்டு என்பது வீட்டுவசதி வாரியம், அவர்களுக்கு எந்தப் பணமும்
கொடுக்கவில்லை. நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இதோடு நிற்கிறது. எனவே, அதை நாம்
அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதில் பெரிய பிரச்சனையில்லை. அதில், எது நீதிமன்ற
வழக்குகள் இருக்கிறதோ, அதையெல்லாம் தனியாக எடுத்து வைத்துவிட்டு category 1, 2
என்பதை அவர்களுக்கு திருப்பி கொடுப்பதற்கான உத்தரவிட்டு மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள், உங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஏறத்தாழ 1500 ஏக்கருக்குண்டான அந்த உத்தரவை
ஒரே நாளில் கொடுத்தார்கள். அதற்குப் பின்னால் ஒரு 1800 ஏக்கரை release செய்வதற்கான
அந்த movement இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், இன்னும்
கொஞ்சம் இருக்கிறது. அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிறிய சிறிய
சிக்கல்கள் இருக்கலாம். அந்த original owner-க்கும் இப்போது இருப்பவர்களுக்கும்
ஏதாவது பிரச்சனை இருக்கலாம். இதையெல்லாம் வைத்து அந்த மற்றவற்றையும் சரி செய்தால்,
1 மற்றும் 2-வது category முடிந்துவிடும்.அதுமட்டுமல்லாமல், category 3 மற்றும்
4-யை பொறுத்தவரை, வீட்டுவசதி வாரியம் அவர்களுக்காக அந்த நிலத்திற்கு என்ன விலையோ
அந்த விலைக்குண்டான ஒரு award-pass செய்து கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி
கொடுக்கின்றபோது அந்த நிலத்தின் உரிமையாளர் சிலர் அதை பெற்றிருக்கிறார்கள். பல பேர்
அதை மறுத்த காரணத்தினால், நீதிமன்றத்தில் அந்தப்பணம் deposit
செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில், நீதிமன்றத்திற்கு கூட போகவில்லை;
revenue deposit ஆகியிருக்கிறது. வீட்டுவசதி வாரியம் கொடுத்துவிட்டது. Revenue தான்
acquire செய்து கொடுக்கவேண்டும். ஆகவே, revenue deposit ஆகியிருக்கிறது அல்லது
நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருக்கிறது.
அதைத்தான் அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
ஆனாலும் கூட ஏறத்தாழ ஒரு 35-40 ஆண்டு காலமாக அதன் மீது எந்தவித நடவடிக்கையும்
எடுக்காத காரணத்தால், அதை இப்படி award pass செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை
பொதுமக்களுக்கு சொல்லாத காரணத்தால், அந்த இடங்களை original owner பல பேருக்கு
விற்றிருக்கிறார்கள்.
அவர்கள் விற்ற இடத்தில் அவர்கள் வீடு கட்டியிருக்கிறார்கள்.
அதற்கு நம்முடைய அரசின் சார்பாகவே அனுமதியை கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாம்
10-15 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களுக்கு EB connection எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இதில்
பிரச்சனை என்னவென்று தெரியாமல் வாங்கியிருக்கிறார்கள். அத்தனை பேரும் அறியாதவர்கள்.
அவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதைத்தான்இப்போது மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் மிகுந்த அக்கறையோடு கவனக்கிறார் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால், original owner-க்கு தெரியும், வீட்டுவசதி வாரியம் இப்படியொரு நோட்டீஸ்
கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியும்.
ஆனால், அதை அவர்கள் வெளியில் சொல்லாமல்
அவர்கள் விட்டுவிட்டார்கள். வாங்கியவர்களுக்கு அதுயெல்லாம் தெரியாது. வாங்கியவர்கள்
மிகச் சாதாரணமானவர்கள். கடன் வாங்கித்தான் வீடு கட்டியிருக்கிறார்கள். எனவே,
அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை நாம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த category 3
மற்றும் 4ல் இருக்கின்ற நிலத்தை எவ்வாறு release செய்வது என்பதற்கு ஒரு கொள்கை
ரீதியாக எப்படி நாம் செய்யவேண்டும் என்பதற்காக ஆய்வு செய்து நமக்கு ஆலோசனை
சொல்வதற்கு இரண்டு ஓய்வு பெற்ற IAS அதிகாரிகள் பொறுப்பு எடுத்திருக்கிறார்கள்.
பணிகளை துவக்கிவிட்டார்கள். ஏப்ரல் மாதம் இறுதிக்குள்ளாக அவர்கள் தங்களுடைய
பரிந்துரையை (recommendation) அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அதற்குப்
பின்னால், வீட்டுவசதி வாரியம் அந்த அடிப்படையில், நீதிமன்றத்தில் இருப்பதை வேறு
மாதிரியும், straight ஆக உள்ளதை straight release செய்வார்கள். இதில் ஒன்று
கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வீட்டுவசதி வாரியம் என்ன award pass
செய்திருக்கிறது.
அதை எடுப்பதற்காக வீட்டுவசதி வாரியம் சில பணிகள் செய்திருக்கும்.
அதற்கு சில செலவுகள் ஆகியிருக்கும்.அதுமட்டுமல்லாமல், வீட்டுவசதி வாரியம் மொத்தமாக
அந்த நிலத்திற்கு award pass செய்து கொடுத்திருக்கும். ஆனால், அதில் ஒரு
குறிப்பிட்ட பகுதி சாலைக்காகவும் அந்தப் பணத்தையும் அங்கே இருப்பவர்கள் பிரித்து
எடுத்து அதற்குண்டான வட்டியையும் போட்டு வீட்டுவசதி வாரியத்திற்கு கட்டிவிட
வேண்டும். இந்த அடிப்படையில்தான் இப்பொழுது நாம் அதை அணுகுகிறோம்.
இதில் என்ன
வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என்பதை அந்த கமிட்டிதான் எங்களுக்கு பரிந்துரை செய்து
அனுப்ப வேண்டும். அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்த தொகையை வைத்து வீட்டுவசதி
வாரியத்தில் கட்டிவிட்டு இரசீது வாங்கும் பொழுது அவர்களுக்கு No Objection கையில்
கொடுக்கப்பட வேண்டும். இன்றைக்கு நீங்கள் பணத்தை கட்டிவிடுங்கள்.நாளைக்கு வாருங்கள்
என்றெல்லாம் நாங்கள் அதிகாரிகளுடன் பேசி முடிவெடுத்திருக்கிறோம்.
காரணம், அப்படி
போகச் சொல்லிவிட்டு வந்தால், மீண்டும் அவர்களுக்கு ஏதாவது சிக்கல் வரக்கூடாது
என்பதற்காக பணம் கட்டும்போதே அவர்கள் ரிலீஸ் ஆகி சென்றுவிடவேண்டும் என்பதற்காக
நாங்கள் இதை செய்திருக்கிறோம். நான் ஏற்கனவே சொன்னேன். அந்த Notice Circular மூலமாக
10 ஆயிரம் ஏக்கர் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 1 மற்றும் 2-இல் ஏறத்தாழ 5
ஆயிரம் ஏக்கருக்கு மேல் வரும். 3 மற்றும் 4-ம் ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் வரும்.
இதெல்லாம் Approximate ஆக இருப்பதுதான் இப்போது அந்த கணக்கு
எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.1 மற்றும் 2-இல் பல பேருக்கு ரிலீஸ் ஆகிவிட்டது.
3 மற்றும் 4-இல் இருப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறது என்றால், பக்கத்தில்
இருப்பவர்களுக்கு ரிலீஸ் ஆகி விட்டதே, நமக்கு ஆகவில்லையே, ஆனால், அவர்களின் வகை
வேறு, இவர்களின் வகை வேறு என்பது இவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு
இதை புரிந்திருக்க முடியாது. நமக்கே இருந்தாலும் தெரியாது. அதனால்தான் பக்கத்து
பக்கத்து நிலங்கள் இருந்தாலும் 1 மற்றும் 2-இல் வந்தவர்கள் ரிலீஸ் ஆகிவிட்டார்கள்.
3 மற்றும் 4 இல் இருந்தவர்கள் தற்போது Process-இல் இருக்கிறார்கள்.
எனவே, அந்த
இடத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள். கண்டிப்பாக இந்த
கமிட்டியின் ரிப்போர்ட் வந்தவுடன் உங்களுக்கு சட்டப்படி நியாயப்படி நடக்கும். இதற்காக நீங்கள் மீண்டும் அதிகாரிகளிடத்திலே மனு கொடுப்பதற்கோ அல்லது யாரையாவது
சென்று பார்த்து எங்களுக்கு இதை செய்துகொடுங்கள் என்று கேட்க வேண்டாம்.
நீங்கள்
வீட்டோடு இருங்கள். நடக்க வேண்டியவை கண்டிப்பாக நியாயமாக நடக்கும் என்ற செய்தி அந்த
மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காகதான். இப்போது 4 வகையையும் ஓர் நேரத்தில்
ரிலீஸ் செய்திருந்தால் இதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அப்படி முடியாது,
இதில் நிறைய ஆய்வு செய்து அறிக்கை பெற வேண்டியுள்ளது. அதனால், அந்த 2 வகைக்கு
உத்தரவு வந்தவுடன் இவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
அந்த சந்தேகம்
வேண்டாம்.முறைப்படி கமிட்டி அறிக்கை ஏப்ரல் மாதம் கிடைத்தவுடன் அதை வைத்து மே,
ஜூன், ஜூலை மாதங்களில் அதை ரிலீஸ் செய்து எடுத்துவிடும் என்பதை அவர்களுக்கு
தெரிவித்துக்கொள்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதில் மிகுந்த அக்கறை
எடுத்து, இதில் பாதிக்கப்பட்டவர்கள், மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடனை வாங்கி சிறு வீட்டை கட்டியிருக்கிறார்கள். அதெற்கெல்லாம் பாதிப்பு வரக்கூடாது
என்பதற்காகதான் இதுபோல் செய்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, பட்டா வழங்குவதில்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையில்
ஒரு கமிட்டியை நியமித்து அதிலும் வீட்டுவசிதி வாரியம் கலந்துகொண்டு அதில் இருந்த
சில சிக்கல்களையெல்லாம் தீர்த்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. 5-ஆவது
வகையைப் பொறுத்தவரை வீட்டுவசதி வாரியம் அவர்களுக்கு முழுமையாக பணம் செலுத்தி அந்த
இடத்தை Position எடுத்து அதில் இரு Portion Develop செய்யப்பட்டுள்ளது.
அதுபோன்ற
வகைதான் 5 ஆவது வகையில் வருகிறது. இதில் சில பேர் ஆக்கிரமிப்பு
செய்திருக்கிறார்கள். அதை பதிவு செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அப்படி
பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றால், வீட்டுவசதி வாரியம் தான் கொடுக்க வேண்டும்.
வேறு யார் செய்து கொடுத்தாலும் அது செல்லாது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்திருக்கும்
இடத்தில் ஏதேனும் Building கட்டியிருந்தால், அதற்காக நஷ்டம் ஏற்படும்என்றால்,
நாங்கள் அதற்கு தற்போது என்ன முடிவு செய்திருக்கிறோம் என்றால், வீட்டு வசதி வாரியம்
இன்றைய தேதியில் அதை விற்பனை செய்வதாக இருந்தால், என்ன தொகை நிர்ணயிக்கிறார்களோ,
அதற்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். அந்த தொகையை அவர்கள் கொடுத்து
எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற சலுகை கிடையாது.
வகை 5
பற்றி அதிகாரிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக இருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது
தான் அரசின் நோக்கம். அதை யாரும் தவறாக இடையில் யாரும் பயன்படுத்தி விடக்கூடாது
என்பதற்காக தான் இவ்வளவு தெளிவாக நாங்கள் சொல்கிறோம்