தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜன.27,28-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு Chance of moderate rain in Tamil Nadu, Puducherry and Karaikal areas on January 27, 28 - Thulirkalvi

Latest

Tuesday 24 January 2023

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜன.27,28-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு Chance of moderate rain in Tamil Nadu, Puducherry and Karaikal areas on January 27, 28

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜன.27,28-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜன.27,28-ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில்அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜன.26 -இல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

 ஜன.27,28-இல் இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ.முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of moderate rain in Tamil Nadu, Puducherry and Karaikal areas on January 27, 28

In this regard, the announcement issued on Tuesday: Due to the low atmospheric circulation, light to moderate rain may occur at one or two places in the coastal districts of Tamil Nadu, adjoining districts and Puducherry and Karaikal on January 27 and 28. The sky will be partly cloudy over Chennai and Phukob areas for the next 48 hours.

The maximum temperature will be around 30-31 degree Celsius and the minimum temperature will be around 22-23 degree Celsius. Fisherman's Warning: Cyclonic winds of 40 km/h over central parts of South Bay of Bengal and equatorial Indian Ocean on Jan.26. First 45 km. 55 kmph at speed and interval. It can also blow fast.

  On Jan. 27, 28, cyclonic wind speed of 40 kmph to 45 kmph in the south-west Bay of Bengal near Sri Lanka. 55 kmph at speed and interval. It can also blow fast. As a result, fishermen have been advised not to go to the sea for fishing on the above dates.

No comments:

Post a Comment