கேட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் 12-ந்தேதி வெளியாகிறது - Thulirkalvi

Latest

Thursday, 6 November 2025

கேட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் 12-ந்தேதி வெளியாகிறது

‘கேட்' நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் 12-ந்தேதி வெளியாகிறது 

நாட்டில் உள்ள ஐ.ஐ.எம். போன்ற தேசிய முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர ‘‘கேட்'' எனப்படும் பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி நடப்பாண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு ஐ.ஐ.எம். நடத்தவுள்ளது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற 12-ந்தேதி வெளியிடப்படும் என்று கோழிக்கோடு ஐ.ஐ.எம். அறிவித்துள்ளது. எனவே பட்டதாரிகள் iimcat.ac.in என்ற இணையதளத்தில் அன்றைய தினத்தில் சென்று ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment