சங்ககிரி வட்டத்தில் 7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்Apply for 7 Village Administrative Office Assistant Posts in Sangakiri Circle - Thulirkalvi

Latest

Thursday 29 December 2022

சங்ககிரி வட்டத்தில் 7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்Apply for 7 Village Administrative Office Assistant Posts in Sangakiri Circle

சங்ககிரி வட்டத்தில் 7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 650 பேர்களுக்கான நேர்முகத் தேர்வு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட செல்லப்பம்பட்டி, கனகிரி, ஊத்துப்பாளையம், ஆவரங்கம்பாளையம், மஞ்சக்கல்பட்டி, அ.தாழையூர், இருகாலூர் உள்ளிட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துதேர்வு நடைபெற்றது. 

இத்தேர்வில் ஏழு காலிபணியிடங்களுக்கு 650 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களுக்கு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.பானுமதி தலைமையில், சமூகநலத்துறை வட்டாட்சியர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினர். 

 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டி ஓட்டி காண்பிக்கும் பெண் நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

 இத்தேர்வில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதவர்கள் மிதிவண்டியை ஓட்டி காண்பித்தனர். சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதியவர்களுக்கு டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்விவு நடைபெற உள்ளது. 

 இப்பணிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பி.இ., பி.டெக், எம்பிஏ., எம்.பில்., உள்ளிட்ட உயர்நிலை கல்வித் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Apply for 7 Village Administrative Office Assistant Posts in Sangakiri Circle

The interview for 650 candidates to fill the vacancies of seven Village Administrative Office Assistants in Sangakiri Circle of Salem District was held at Sangakiri District Collector's Office on Thursday. A written examination was held recently to fill seven Village Administrative Office Assistant Vacancies including Chelapampatti, Kanagiri, Uthuppalayam, Aavarangampalayam, Manjakalpatti, A.Thalayur, Irukalur within Sangakiri circle.

650 candidates appeared for seven vacancies in this examination. Sangakiri District Collector S. Banumathi, Social Welfare District Collector Rajendran and Deputy District Collector Mahendran conducted an interview for the candidates who wrote the exam at Sangakiri District Collector's office premises.

  Zonal Deputy District Collector Ramesh, Election Deputy District Collector Tamilchelvi, revenue inspectors, officers and others examined the certificates of the female candidates who appeared in the interview for the post of village administrative office assistant on Thursday.

  In this test, people who do not have a license to drive two-wheelers drove a bicycle. 650 candidates have applied for seven village administrative office assistant posts under Sangakiri circle. The interview will be held from 28th December to 10th January for the candidates.

  While it was announced that the minimum educational qualification for this job is 5th standard pass, people with higher educational qualifications including BE, B.Tech, MBA, MP, have participated in the interview.

No comments:

Post a Comment