தமிழகத்தில் டிச.30 வரை லேசான பனிமூட்டம் நிலவும் Mild fog will prevail in Tamil Nadu till Dec. 30 - Thulirkalvi

Latest

Thursday 29 December 2022

தமிழகத்தில் டிச.30 வரை லேசான பனிமூட்டம் நிலவும் Mild fog will prevail in Tamil Nadu till Dec. 30

தமிழகத்தில் டிச.30 வரை லேசான பனிமூட்டம் நிலவும்

 தமிழகத்தில் டிசம்பர் 30-ம் தேதி வரை லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் டிச.30 வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23.24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Mild fog will prevail in Tamil Nadu till Dec. 30

  Tamil Nadu Meteorological Department has said that there will be light fog till December 30.

  According to the information released by the Meteorological Department, light to moderate rain may occur in one or two places in South Tamil Nadu districts from today till December 30 due to the low atmospheric circulation over the Southeast Arabian Sea and adjoining areas.

Light fog will be seen in the morning in the north inner districts of Tamil Nadu. The sky will remain partly cloudy for the next 48 hours.

Light to moderate rain accompanied by thunder and lightning may occur at a few places in the city. The maximum temperature will be around 31-32 degree Celsius and the minimum temperature will be around 23.24 degree Celsius.

No comments:

Post a Comment