சென்னையில் காற்று மாசு அளவு குறைவு: 10 ஆண்டு நடவடிக்கையில் பயன்! Chennai's air pollution levels down: 10 years of action benefited! - Thulirkalvi

Latest

Friday 9 September 2022

சென்னையில் காற்று மாசு அளவு குறைவு: 10 ஆண்டு நடவடிக்கையில் பயன்! Chennai's air pollution levels down: 10 years of action benefited!

சென்னையில் காற்று மாசு அளவு குறைவு: 10 ஆண்டு நடவடிக்கையில் பயன்!

சென்னையில், கடந்த 10 ஆண்டுகளில் பசுமை பரப்பளவு அதிகரிப்பு, போக்குவரத்து சாலைகள் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால், காற்று மாசு அளவு மிகவும் குறைந்துள்ளது' என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருப்பதாவது: சென்னை நகரில், 48 லட்சம் வாகனங்கள் உள்ளன. 

நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்பாடு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1970ல், 54 சதவீதமாக இருந்த பொது போக்குவரத்து, 2018ல், 28.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, தனிநபர் வாகனங்கள் பயன்பாடு முக்கிய காரணம்.நகர் மயமாக்கல், தொழில் மயமாக்கலின் காரணமாக, சென்னையின் மக்கள் தொகை மற்றும் தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. திடக்கழிவுகள், வாகன கழிவுகளை திறந்தவெளியில் எரித்தல் போன்றவற்றால் உள்ளூர் காற்றின் தரம் மட்டுமின்றி, உலகளாவிய காற்று மாசு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஆனாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை முயற்சியால், காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது. சென்னையில் எட்டு இடங்களில் காற்று தரம் கண்காணிக்கப்படுகிறது. கடந்த 2010 - 11ல், காற்றில் பறக்கும் நுண்துகள்கள் அளவு ஆண்டு சராசரி, 168 மைக்ரோ கிராமாக இருந்தது. 2020 - 21ல், இந்த அளவு 58 மைக்ரோ கிராமாக குறைந்துள்ளது.மேலும், இந்தியாவின் ஆறு பெருநகங்களை ஒப்பிடுகையில், சென்னையில் காற்று மாசு மிகவும் குறைந்துள்ளது. 

 சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைப்படி, எரிவாயு அல்லது திரவ எரிபொருளை பயன்படுத்துகின்றன.அனைத்து தொழிற்சாலைகளிலும், காற்று மாசு குறித்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. ஏதேனும் பாதிப்பு இருந்தால், உடனடியாக குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்பட்டு, சரி செய்யப்படுகிறது. கட்டுமான இடங்களிலும், துாசி நுண்துகள்கள் படர்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில், 'மியாவாக்கி' காடுகள், போக்குவரத்து சாலை சுத்தப்படுத்துதல், சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திறந்தவெளிகளில் குப்பை எரித்தலை தடுத்தல், பகலில் நகருக்குள் கனரக வாகனங்களின் பயன்பாடை தடுத்தல், பேட்டரி வாயிலாக இயக்கப்படும் வாகனங்களை ஊக்குவித்தல், மெட்ரோ ரயில் சேவை போன்றவற்றாலும் காற்று மாசு குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை காற்றின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், 'நகர செயல் திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: காற்று மாசுக்கு காரணமாக இருக்கும் தொழிற்சாலைகளை, நகரத்திற்கு வெளியே இடமாற்றுவது அல்லது தடை செய்வது குறித்து முடிவெடுப்பதற்கு, சென்னை தொழில் நுட்ப கழகம் வாயிலாக காற்று மாசு பற்றிய ஆய்வு மேற்கொள்ளுதல் சென்னையில், காற்றின் தரத்தை திறம்பட கண்காணிப்பதற்கு, கூடுதலாக ஐந்து காற்று தர நிலையங்கள் அமைத்தல் சாலை துாசியை குறைக்க, 69 சாலை சந்திப்புகளில் நீரூற்றுகள் அமைத்தல். சாலை பள்ளங்களால் துாசிமாசு ஏற்படுவதை தடுக்க, துப்புரவு இயந்திரங்கள், சூப்பர் சர்க்கர்ஸ், ஜெட் பேட்சர்கள் வாயிலாக துரிதமாக சரி செய்தல் வடக்கு, மத்திய, தெற்கு சென்னையில் 40 கி.மீ., நீளத்துக்கு மோட்டார் இல்லாத போக்குவரத்து அமல்படுத்துதல். 176 கி.மீ., நீளத்துக்கு நடைபாதையை, ௫ அடியிலிருந்து 10 அடியாக உயர்த்துதல் நகரில் 12 இடங்களில் மயான பூமிகளை எரிவாயு பயன்பாடுக்கு மாற்றுதல் நகரம் முழுதும் 100 இயற்கை எரிவாயு நிலையங்களை அமைத்தல் கட்டட பகுதிகள், சாலை பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்.

Chennai's air pollution levels down: 10 years of action benefited!

In Chennai, due to the increase in green area and cleaning of traffic roads in the last 10 years, the level of air pollution has decreased significantly, said the Tamil Nadu Pollution Control Board. The Tamil Nadu Pollution Control Board has said: There are 48 lakh vehicles in Chennai city.

Day by day the number of vehicles is increasing. Public transport, which was 54 percent in 1970, has decreased to 28.5 percent in 2018. The main reason for this is the use of personal vehicles. Due to urbanization, industrialization, the population of Chennai and the use of personal vehicles have increased. Solid waste, open burning of vehicular wastes not only affects local air quality but global air pollution.

However, due to various technological and management efforts of the Pollution Control Board, the air quality has improved significantly. Air quality is monitored at eight locations in Chennai. During 2010-11, the annual average of airborne particulate matter was 168 micrograms. In 2020-21, this level has come down to 58 micrograms. Also, compared to the six major cities of India, Chennai has the lowest air pollution.

 Industries in Chennai and its surrounding areas use gas or liquid fuel as per the recommendations of the Pollution Control Board. Air pollution is monitored 24 hours a day in all industries. If there is any problem, the information is sent immediately through text message and it is fixed. At construction sites, steps have been taken to prevent dust particles from spreading. On behalf of the Chennai Municipal Corporation, various projects including 'Miyawaki' forests, cleaning of traffic roads, separate lanes for cycling have been undertaken. Air pollution has been reduced by banning garbage burning in open spaces, banning the use of heavy vehicles in the city during the day, encouraging battery-powered vehicles, and metro rail services. It says so.

In order to further improve the air quality of Chennai, a 'City Action Plan' has been developed by the Tamil Nadu Pollution Control Board. The key features of the plan include: Conducting a survey of air pollution in Chennai through the Chennai Institute of Technology to decide whether to relocate or ban polluting industries outside the city. , for effective monitoring of air quality, setting up of five additional air quality stations to reduce road pollution, setting up water fountains at 69 road junctions. To prevent pollution from road potholes, speedy repair through cleaning machines, supersuckers, jet patchers Implementation of non-motorized traffic for a length of 40 km in North, Central and South Chennai. 176 km long pavements to be raised from 5 feet to 10 feet. 12 graveyards in the city have been converted to gas. 100 natural gas stations have been set up across the city.

No comments:

Post a Comment