Decision to appoint 4000 assistant professors in colleges 4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு - Thulirkalvi

Latest

Saturday 24 September 2022

Decision to appoint 4000 assistant professors in colleges 4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு

அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பதவிகளில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, 10 நாட்களில் வெளியிடப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:கடந்த, 2012ல் நியமிக்கப்பட்ட, 955 அரசு கல்லுாரி ஆசிரியர்கள், அவர்களின் பயிற்சி காலத்தை தவிர மற்ற ஆண்டுகளுக்கு, பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளனர். 

 மேலும், அரசு பல்கலைகளின் கீழ் செயல்பட்ட, 41 உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என, கடந்த ஆட்சியில் அறிவித்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.தற்போது, அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட கல்லுாரிகளின் செலவினத்துக்கு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றுவோருக்கு உயர் கல்வி துறை வழியாக ஊதியம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நியமன அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., 10 நாட்களில் வெளியிடும்.இதில் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வுக்கு தகுதி பெறும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, விதிகளுக்கு உட்பட்டு சலுகை அளிக்கப்படும். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு, 1,030 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரைவில், பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இளநிலை படிப்புக்கான இடங்களுக்கு, 'வராண்டா அட்மிஷன்' முறையில் மாணவர் சேர்க்கை நடக்கும்.கவுரவ விரிவுரையாளர் காலி பணியிடங்கள், இதுவரை கல்லுாரிகளில் நேரடியாக நிரப்பப்பட்டன. இனி, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் மண்டல அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படும்.இவ்வாறு பொன்முடி கூறினார்.

The notification for filling up 4,000 vacant posts of assistant professors in government colleges will be published in 10 days, said Higher Education Minister Ponmudi. His interview: Last year, 955 government college teachers appointed in 2012 have been restricted for years other than their training period.

 Also, 41 member colleges which were functioning under government universities were announced in the previous regime to be converted into government colleges, but no funds were allocated for the same. At present, the government has allocated funds for the expenses of the colleges which have been converted into government colleges.

4,000 Assistant Professor Posts are to be filled in Government Arts and Science Colleges. The appointment notification for this purpose will be published by the Teacher Selection Board, DRP, in 10 days. Honorary lecturers who pass the examination and qualify for the interview will be given concessions as per the rules. 1,030 candidates have been selected for the post of Govt Polytechnic Lecturer.

Chief Minister Stalin is going to issue appointment orders to them soon. For the vacant undergraduate seats in Government Arts and Science Colleges, admission will be done through 'Varanda Admission' method. Honorary Lecturer Vacancies, so far, have been filled directly in the colleges. Henceforth, it will be filled through the Zonal Offices of the Directorate of College Education, Ponmudi said.

No comments:

Post a Comment