குரூப்-1 முதன்மைத் தேர்வை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் - Thulirkalvi

Latest

Wednesday, 26 November 2025

குரூப்-1 முதன்மைத் தேர்வை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள்

குரூப்-1 முதன்மைத் தேர்வை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள்

டிஎன்பிஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு டிச.1 முதல் 4-ம் தேதி வரை சென்னையில் மட்டும் நடைபெற உள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்.நுழைவுச்சீட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி, தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் காலை 9 மணிக்கு முன்னரே சென்றுவிட வேண்டும். விடை தாளில் கருமை நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வறைக்குள் மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச்செல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment