SSLC விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை (13.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - Thulirkalvi

Latest

Thursday, 12 June 2025

SSLC விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை (13.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SSLC விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை (13.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

மார்ச்/ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 13.06.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 17.06.2025 (செவ்வாய்கிழமை) @ισω www.dge.tn.gov.in στο Notification- Click @ "SSLC, March/Aprill 2025 Scripts Download" என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள "Application for Retotalling/Revaluation" 6 5 Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 16.06.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் 18.06.2025 (புதன்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Press Release என்பதை Click செய்து அறிந்து கொள்ளலாம். தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையைப் பணமாக செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment