அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறை களைவு மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாணை வெளியீடு - Thulirkalvi

Latest

Thursday, 12 June 2025

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறை களைவு மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாணை வெளியீடு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் "குறை களைவு" மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாணை வெளியீடு 

மேலே ஒன்று முதல் மூன்று வரை படிக்கப்பட்ட அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதத்தில் குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்துப் பல்வேறு அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன

.2. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட 01.08.2014 ஆம் நாளிட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கிணங்க வெளியிடப்பட்ட ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டும். மேற்படி நடைமுறைகள், மேலே ஆறாவதாக மற்றும் எட்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களின் வாயிலாக மீண்டும் வலியுறுத்தப்பட்டன. 

3. இதனைத் தொடர்ந்து, நீதிப்பேராணை மனு எண்.32798/2024-இல் சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 14.11.2024-ஆம் நாளிட்ட உத்தரவின் அடிப்படையில், மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் வாயிலாக குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்தப் பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களைத் தவறாது பின்பற்றுமாறும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அனைத்துத் துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர். 

4. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மேலே பத்தாவதாகப் படிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்க்காணுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது:-

No comments:

Post a Comment