2025- 2026 பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் பற்றிய அறிவிப்பு - Thulirkalvi

Latest

Thursday, 12 June 2025

2025- 2026 பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் பற்றிய அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான  மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் வரும் 23.06.2025 & 24.06.2025 ஆகிய இரண்டு நாட்களும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் அலுவலர்கள் (முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை), (தொடக்கக் கல்வி). (தனியார் பள்ளிகள்) மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும்.

Download full Proceedings

ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வுசெய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும்போது அந்தந்த மாவட்டத்திற்குரிய கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து இயக்குநர்கள், இணைஇயக்குநர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment