ஊடகத்துறையில் ஊதியம் மிக்க பணி வாய்ப்புகள்

0 ThulirKalvi
ஊடகத்துறையில் ஊதியம் மிக்க பணி வாய்ப்புகள் விஷுவல் கம்யூனிகேஷன் (Visual communication) என அழைக்கப்படும் காட்சித் தொடர்பியல் படிப்புகளில் சேர இக்கால மாணவ, மாணவியர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பெரும்பாலான கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு அளிக்கப்படுகிறது. 
விஷுவல் கம்யூனிகேஷன் படித்தால் திரைப்படத் துறையில் சாதிக்கலாம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடையே உள்ளது. திரைத்துறை மட்டுமின்றி விளம்பரம், சின்னத்திரை, செய்தி ஊடகங்கள், பத்திரிகைத் துறை, அனிமேஷன், எடிட்டிங், இணையதளம் உள்ளிட்ட பிற துறைகளிலும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு பல்வேறு நிலைகளில் நிறைய பணி வாய்ப்புகள் இருக்கின்றன. 

விஷுவல் கம்யூனிக்கேஷன் படிப்பு முழுக்க முழுக்க படைப்பாற்றல் தொடர்பான படிப்பு என்பதால் இத்துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக துறை சார்ந்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, சினிமா, சின்னத்திரை, செய்தி சேனல்கள், விளம்பரங்கள், இணைய தளங்கள் உள்பட என்னென்ன வகையான ஊடகங்கள் உள்ளன என்பதையும், எந்தெந்த ஊடகங்களில் எப்படிப்பட்ட கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள் என்பது குறித்த புரிதலும் இத்துறை மாணவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். 

தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் ஊடகங்கள் எவை என்பது குறித்தும், அப்படிப்பட்ட ஊடகங்கள் மூலம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு இத்துறை படிப்பில் இணையலாம். இந்தப்படிப்பில் இணைய பிளஸ்-டூ படிப்பில் எந்த குரூப்பில் படித்திருந்தாலும், நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் கல்விக்காலம் 3 ஆண்டுகளாகும். இளநிலை படிப்பில்,  B.Sc. Animation and Visual Communication  B.Sc. Advanced Animation  B.Sc. Gaming Art and Design ஆகிய கோர்ஸ்கள் முக்கியமாக இருக்கின்றன. இளநிலை முடித்தவர்கள் இத்துறையிலேயே முதுநிலை படிப்பையும் முடித்து தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம். விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பதற்கு விண்ணப்பிக்கும்போது, அத்துறைக்குத் தேவையான உபகரணங்களும், தகுதியான ஆசிரியர்களும் இருக்கிறார்களா என விசாரித்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்கள், எங்கு பணியாற்றுகிறார்கள் என்பதையும் விசாரித்து அறிந்து கொள்ளலாம். 

இத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் :-  திரைத் துறையில் சாதிக்க விரும்புபவர்கள் தங்கள் தனிப்பட்ட திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  சின்னத் திரை நிகழ்ச்சிகளில் இயக்கம், எடிட்டிங், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ஒளி-ஒலிப்பதிவு, நிகழ்ச்சி நிர்வாகத் தயாரிப்பு போன்ற பிரிவுகளில் பணி வாய்ப்பு உண்டு,  விளம்பரத் துறையில் இயக்கம், கிரியேட்டிவ் ஹெட், அனிமேஷன் உள்ளிட்ட பணிகள் உள்ளன. 

 போட்டோகிராபியில் நுணுக்கமான திறனை வளர்த்துக்கொண்டு திரைப்படங்கள், பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றில் பணியாற்றலாம்.  2டி, 3டி, எடிட்டிங் படிப்புகளை புரிந்து கற்றால் அனிமேஷன், எடிட்டிங் பிரிவுகளில் சாதிக்கலாம். அவ்வகையில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தவர்கள் பிலிம் டைரக்டர், ஸ்க்ரிப்ட் ரைட்டர், திரைப்பட ஒளிப்பதிவாளர், புகைப்பட நிபுணர், எடிட்டர், கிராபிக்ஸ் டிசைனர், இ-லேர்னிங் கண்டென்ட் ரைட்டர், விளம்பர பட இயக்குநர்-தயாரிப்பாளர், அனிமேட்டர், Modeller-Texture Artist, Lighting Artist, Character Designer, Games Asset Artist-3D Generalist ஆகிய பணிகளில் நல்ல ஊதியம் பெறமுடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.