கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில்
2025-2026 ஆம் ஆண்டு - முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
பயிற்சிக்காலம் : 1
வருடம் முதல் பருவம் : 6 மாதங்கள் இரண்டாம் பருவம்: 6 மாதங்கள் 2 பருவ முறைகள்
தகுதிகள் கல்வி தகுதி : குறைந்தபட்ச கல்வி தகுதியாக +2 தேர்ச்சி அல்லது SSLC
தேர்ச்சியுடன் 3 வருட பட்டயப்படிப்பு (Diploma) தேர்ச்சி (10+3) பெற்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு
வழங்கப்படும். 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க
வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. > கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி
தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத
வேண்டும். இப்பயிற்சிக்கு அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு 15.05.2025 அன்று முதல் இணையதளத்தின் மூலம்
விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான
சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும். விண்ணப்ப
கட்டணம் ரூ.100/-ஐ இணையவழி (Billdesk Payment Gateway) மூலம் மட்டுமே செலுத்த
வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
எனில் தனித்தனியே இணையவழியில் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க
வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.06.2025 அன்று
பிற்பகல் 5.00 மணி வரை மட்டும்.
அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள்
ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரி www.tncu.tn.gov.in
மூலம் தெரிந்துகொள்ளலாம். இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். இணையவழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கூட்டுறவு
மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்தால், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள்
எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. > பயிற்சிக்கான விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு பயிற்சியில் சேர்வதற்கு தகுதி பெற்றவர்கள் விவரம் பயிற்சி
நிலையங்கள் மூலம் தெரிவிக்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கு தேர்வு செய்யப்படும்
பயிற்சியாளர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி நிலையத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரடியாக
சென்று பயிற்சியில் சேர்ந்துக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்
பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,850/-ஐ முழுவதும் ஒரே தவணையில் இணையவழி மூலமே (Billdesk
Payment Gateway) செலுத்த வேண்டும்.