இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு மருத்துவ அலுவலர் (Medical Officer) | ஊதியம் ரூ.60,000/- - Thulirkalvi

Latest

Friday, 9 May 2025

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு மருத்துவ அலுவலர் (Medical Officer) | ஊதியம் ரூ.60,000/-

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலின் மருத்துவமையத்தில் மருத்துவ அலுவலர் பதவியினை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடத்திற்கு தகுதியுள்ள, இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 12.06.2025 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரங்களில், (நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

1. இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

2. விண்ணப்பங்கள் செயல் அலுவலர், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் 601102 என்ற பெயரில் பதிவுத்தபாலில் 12.06.2025 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்பப்பட வேண்டும். தகுதியான

விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். 3. 10.06.2025 ம் தேதி மாலை 5.45 மணி வரையில், விண்ணப்பங்கள் மற்றும் இதர

www.omsribhavaniammantempleperiyapalayam.org என்ற திருக்கோயில் இணையதளத்திலும், http://hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4. ராஜீகத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. முக்கிய விவரங்கள், திருத்தங்கள், மாற்றங்கள் இருப்பின் இணையதள முகவரியில் மட்டுமே வெளியிடப்படும். செய்திதாளில் வெளியிடப்படமாட்டாது.

5. இந்த ஒப்பந்த அடிப்படையிலான நியமனம் தொடர்பான நடைமுறைகள்யாவும், இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டதாகும்.



No comments:

Post a Comment