இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான கட்டாய உள்ளக பயிற்சி நிறைவுக்கான தேதி நீட்டிப்பு Extension of Date for Completion of Compulsory Internship for Junior Medical Students - Thulirkalvi

Latest

Thursday 12 January 2023

இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான கட்டாய உள்ளக பயிற்சி நிறைவுக்கான தேதி நீட்டிப்பு Extension of Date for Completion of Compulsory Internship for Junior Medical Students

இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான கட்டாய உள்ளக பயிற்சி நிறைவுக்கான தேதி நீட்டிப்பு

இளநிலை மருத்துவப் (எம்பிபிஎஸ்) பட்ட மாணவா்களுக்கான கட்டாய உள்ளகப் பயிற்சி (பயிற்சி மருத்துவா்) நிறைவு செய்ய வேண்டிய தேதி ஜூன் 30-ஆக நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. தற்போது இந்த உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்ய வரும் மாா்ச் 31-ஆம் தேதி கடைசி என்று இருந்த நிலையில், மாணவா்கள் மற்றும் மருத்துவச் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

 மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஓஆா்டிஏ) மற்றும் மருத்துவ மாணவா்கள் சங்கம் சாா்பில் மத்திய அமைச்சகத்துக்கு அண்மையில் எழுதப்பட்ட கடிதத்தில், ‘உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த மாணவா்கள் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

 அந்த வகையில், தற்போதைய கடைசி தேதியான மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பெரும்பாலான எம்பிபிஎஸ் மாணவா்கள் தங்களுக்கான உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்ய வாய்ப்பில்லை. குறிப்பாக தில்லி, மத்திய பிரேதசம், ராஜஸ்தான் உள்பட மேலும் சில மாநிலங்களைச் சோ்ந்த எம்பிபிஎஸ் மாணவா்கள் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, உள்ளகப் பயிற்சி நிறைவு தேதியை ஜூன் 30-ஆக நீட்டிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

 இதுகுறித்து அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான ஓராண்டு கட்டாய உள்ளகப் பயிற்சி நிறைவு தேதி ஜூன் 30-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும்’ என்றனா். 

 இதனிடையே, ‘எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான உள்ளகப் பயிற்சி நிறைவு தேதியை நீட்டித்துள்ளதன் அடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட் - பிஜி) தேதியையும் ஒத்திவைக்க வேண்டும்’ என்று எம்பிபிஎஸ் மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோரிடமிருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது, 2023-ஆம் ஆண்டுக்கான நீட்-பிஜி தோ்வு வரும் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Extension of Date for Completion of Compulsory Internship for Junior Medical Students

Union Health Ministry sources said on Thursday that the date for completion of mandatory internship (Physician) for MBBS students has been extended to June 30. He also informed that while the last date for completing this internal training was March 31, the deadline has been extended in response to the request of students and medical associations.

  In a recent letter written to the Union Ministry on behalf of the Federation of Medical Associations (FORDA) and the Medical Students' Association, a new rule has been implemented that only students who have completed their internship can join postgraduate medical courses.

  As such, most of the MBBS students are unlikely to complete their internship by the current deadline of March 31. Especially the future of MBBS students who have passed some other states including Delhi, Madhya Pradesh, Rajasthan will be questionable. Therefore, it was requested that the date of completion of internal training should be extended to 30th June. This has been accepted by the Union Ministry.

  Ministry officials said on Thursday, 'Accepting the request of various parties, the completion date of one-year compulsory internal training for MBBS students has been extended to June 30. An official notification will be released soon,' he said.

  Meanwhile, the officials also informed that requests have been received from the MBBS students and their parents that 'on the basis of extension of the completion date of internal training for MBBS students, the date of 'NEET' qualification and entrance examination (NEET - PG) for postgraduate medical courses should also be postponed. Currently, it has been announced that the NEET-PG examination for the year 2023 will be held on March 5.

No comments:

Post a Comment