மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி - Thulirkalvi

Latest

Wednesday, 4 June 2025

மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி

வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். இவர்களில், தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்று, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. திரிபுரா, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.

No comments:

Post a Comment