போக்சோ குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு! - Thulirkalvi

Latest

Tuesday, 29 April 2025

போக்சோ குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

போக்சோ குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு! 

பார்வையில் காணும் நேர்முகக்கடிதத்தின் நகல் இத்துடன் இணைத்தனுப்படுகிறது அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாவண்ணம் தடுக்கவும், அக்குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அப்பரிந்துரைகளை தவறாது பின்பற்றுமாறும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதுகுறித்த மாதாந்திர அறிக்கை அளிக்கவும், இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த (த.பி.பா.) 2 விவரங்களை தொகுக்கவும். துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்கவும் தங்கள் துறை சார்ந்த தொடர்பு அலுவலர் (Nodal Officer) நியமனம் செய்யுமாறும் அதன் விவரத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment