மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
பள்ளிக் கல்வித் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தொகுக்கவும், துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்/பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறை தொடர்பு அலுவலர்களாக மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் நியமிக்கப்படுகின்றனர். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கூடுதல் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர் மேலும், இப்பொருள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு உடன் அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பார்வை 5 இல் காண் மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை வழக்கு CrHA(MD)No. 316 of 2022. நாள் 19.03.2024 அன்று வழங்கப்பட்ட தீர்பாணையில் பின்வருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 15.5 Therefore, this Court feels to act swiftly and impose tough punishment on the person who is found guilty of sexually harassing sport women. Perpetrator of the said crimes are also to be suitably punished and to take prompt action new form of measurement in the form of legislature is timely required. Therefore, this Court issues direction to the Chief Secretary Government of Tamilnadu, to address the issue of protection of women participants in sports from sexual harassment in the interest of the sport Education and transparent participation of women in sport within a period of six months from the date of receipt of a copy of this order. பார்வை 7 இல் காண் செயல்முறைகளின் படி உடற்கல்வி ஆசிரியர் திரு ரா. தமிழ்செல்வன் மீது தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி 17(b) ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு பணியறவு (Dismissal from service) செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. பார்வை 2 முதல் 4 வரை உள்ள அரசாணைகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சார்ந்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாலியல் குற்றம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பார்வை 4 -இல் காணும் கடிதம் மூலம் அரசால் தற்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சார்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும், பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளியில் உள்ள சூழலை மாணவர்களுக்கு மேலும் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்திட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடல் வேண்டும். 

1. பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் இக்கல்வியாண்டில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்திற்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதி செய்திட வேண்டும். அதன்பின்னர் 6 மாதத்திற்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். 

2. மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில், பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். 

3. விளையாடுப் போட்டிகள். கலை நிகழ்ச்சிகள், கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணிய இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். 

4. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதிக்குள் வெளி நபர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மேலும், விடுதி பராமரிப்புப் பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள். பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். 

5. அரசுத்துறைகளால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் தங்கும் இடவசதி ஏற்படுத்தி தரப்படும் நிகழ்வில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாணவர்கள் இவ்வசதியினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும். பள்ளித்தலைமையாசிரியரால் வழங்கப்பட வேண்டும். எழுத்துர்ப்பூர்வமாக 

6. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களுடைய புகார்களை தெரிவிக்கும் வகையில் மாணவர் மனசு பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு குழுவிற்கு பொறுப்பான பெண் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமித்து மாணவர் பாதுகாப்பு சார்ந்து விழிப்புணர்வும் வழங்கிட அறிவுறுத்தப்பட வேண்டும்.உரிய பதிவேடு பராமரிக்கப்பட்டு தினந்தோறும் பெறப்படும் புகார்களை பதிவு செய்து உரிய தொடர் நடவடிக்கையை இக்குழு மேற்கொள்ள தெரிவிக்க வேண்டும். 

7. பள்ளிகளில், மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். 8. பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்."மாணவர் மனசு

புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக்கூடாது என்பது முக்கியமாகையால், அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது. 

9. அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் பள்ளியில் நடக்கும் அனைத்து காலைவணக்கக் கூட்டங்களில் தலைமை ஆசிரியரும், ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். அதில் சில நிமிடங்கள் குழந்தைகள் பாதுகாப்பு "மாணவர் மனசு" புகார் பெட்டி மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குழந்தைகள் நன்கு அறியும் வண்ணம் எடுத்துரைக்கப்பட வேண்டும். 10. CCTV கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ/மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

11. பெண் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி பெண் ஆசிரியர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறவர்களுக்கு, குழந்தை கவனம் அடையாளம் காணப்படுகிறவர்களுக்கு பயிற்சி மிக அவசியம் மேலும், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்படும் குழந்தைகள், ஓர் பெற்றோர் உடைய பெற்றோர். பாதுகாவலர் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் குழந்தை நல நிறுவனங்களில் உள்ள குந்தைகள் மற்றும் நீண்ட நாட்களாக விடுப்பில் உள்ள குழந்தைகள். 

12.கழிப்பிடங்கள் பள்ளி நிர்வாகத்தின் மற்றும் பணியாளர்கள் கழிப்பறைகள் ஆய்வுக்குட்படுத்தி மறைவான இடங்கள் மற்றும் பாதுகாப்புள்ள இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பெண் கழிப்பறைகள் மகளிர் பணியாளர்கள் மட்டுமே. தூய்மைப் பணிகளை செய்ய பணிக்கப்பட வேண்டும். கவனம் தேவைப்படும் இடங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய மேற்பார்வைகளில் பெண் தலைமை ஆசிரியர்களால் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பெண் தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் உதவி தலைமை ஆசிரியர் மேற்பார்வையிடுதல் வேண்டும். 

13. அனைத்து வகையான ஆய்வகங்கள்/நூலகங்கள் ஆகியவற்றில் எப்பொழுதும் ஓர் பெண் ஆசிரியர்/பணியாளர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். 

14. பணியாளர் அறைகள்(Staff Rooms) ஆண் ஆசிரியர்களின் அறையில், ஆண் பணியாளர் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதித்தல் கூடாது. இதனை கட்டாயம் நடைமுறை படுத்த வேண்டும். 

15. மாற்றுப் பணியாளர்கள்/மேற்கண்ட பணிகளை ஏதேனும் ஓர் பெண் ஆசிரியரிடம் ஒப்படைக்காமல் சுழற்சி முறையில் நடைமுறை படுத்த வேண்டும். ஏதேனும் பெண் பணியாளர் விடுப்பில் வருகை புரியாமல் இருந்தால், பிரிதொரு பெண் ஆசிரியர்/பணியாளர் தொடர்வதை உறுதி செய்திட வேண்டும். சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும் பொழுது குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால், கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஓர் பெண் பணியாளர் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும்.இதை ஒவ்வொரு நாளும் நடைபெற செய்தல் வேண்டும்.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காண்பதற்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். 16. தற்காப்பின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு NO>GO>TELL (NO- teaching the child to feel no if the child tells unsafe, Go shout tell someone the child trusts alone the = inadent or shout immediately) என்ற பாதுகாப்பு விதியினை தெரிந்துகொள்ள செய்தல் வேண்டும். பெண்கள் பயிலும் பள்ளியில் பெண்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் (Co-Education) குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருத்தல் வேண்டும். 17. அரசாணை நிலை எண்.89. பள்ளிக்கல்வி (பொது) துறை, நாள்.03.04.25 பத்தி 2இல் தெரிவிக்கப்பட்ட விவரங்களை உடனடியாக தெரிவித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அரசால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு ஆணைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும். பள்ளிக்கு வெளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளுக்கு பங்கேற்கும் போது கட்டாயம் தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள், பங்கேற்கும் குழந்தைகளின் தாயார் பெண்குழந்தைகளை அழைத்துவர அனுமதித்தில் வேண்டும். அவ்வாறு பொறுப்பு வழங்கப்படும் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பு விவரம் அறிந்தவராகவும். பொறுப்பாக செயல்படுபவராகவும், எவ்வித புகார்களுக்கும் இடம் இல்லாதவர்களாகவும். இதற்கென பின்லத்தை ஆய்வு செய்து பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் பட்டியலில் உள்ள பெற்றோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பெற்றோர்கள் உரிய ஆவணங்களை தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும். 

பாலியல் குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால், மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. வேண்டும்.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காண்பதற்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். 16. தற்காப்பின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு NO>GO>TELL (NO- teaching the child to feel no if the child tells unsafe, Go shout tell someone the child trusts alone the = inadent or shout immediately) என்ற பாதுகாப்பு விதியினை தெரிந்துகொள்ள செய்தல் வேண்டும். பெண்கள் பயிலும் பள்ளியில் பெண்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் (Co-Education) குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருத்தல் வேண்டும். 

17. அரசாணை நிலை எண்.89. பள்ளிக்கல்வி (பொது) துறை, நாள்.03.04.25 பத்தி 2இல் தெரிவிக்கப்பட்ட விவரங்களை உடனடியாக தெரிவித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அரசால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு ஆணைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும். பள்ளிக்கு வெளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளுக்கு பங்கேற்கும் போது கட்டாயம் தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள், பங்கேற்கும் குழந்தைகளின் தாயார் பெண்குழந்தைகளை அழைத்துவர அனுமதித்தில் வேண்டும். அவ்வாறு பொறுப்பு வழங்கப்படும் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பு விவரம் அறிந்தவராகவும். பொறுப்பாக செயல்படுபவராகவும், எவ்வித புகார்களுக்கும் இடம் இல்லாதவர்களாகவும். இதற்கென பின்லத்தை ஆய்வு செய்து பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் பட்டியலில் உள்ள பெற்றோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பெற்றோர்கள் உரிய ஆவணங்களை தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும். பாலியல் குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால், மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.