கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு - Thulirkalvi

Latest

Monday, 2 June 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட இருக்கின்றன. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதனால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான சூழல் அமையவில்லை. இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள இந்த சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக திரும்ப இருக்கின்றனர். அதிலும் மழலைப் பிஞ்சுகள் பள்ளி பருவத்தை தொடங்க உள்ளனர். அவர்களை உற்சாகமாக வரவேற்க ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றனர். மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

No comments:

Post a Comment