சாதி ரீதியிலான சின்னங்கள், கட்சித் துண்டுகளை பள்ளிகளில் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் கல்வித்துறை கடும் எச்சரிக்கை - Thulirkalvi

Latest

Friday, 4 April 2025

சாதி ரீதியிலான சின்னங்கள், கட்சித் துண்டுகளை பள்ளிகளில் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் கல்வித்துறை கடும் எச்சரிக்கை


பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும், ஒரு மாணவர் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை கையில் பிடித்து காட்டியதோடு, 2 மாணவர்கள் கட்சித் துண்டுகளை அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் இத்தகைய திரைப்படம் படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது. எனவே பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி நடந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment