திருக்கை மீனின் மருத்துவ குணம்
திருக்கை மீன் என்று அழைக்கப்படும் ‘ஸ்டிங்ரே மீன்’
வெப்ப மண்டல கடல் பகுதியில் காணப்படும் ஒரு வகை மீன் ஆகும். இதற்கு மீன் போன்ற
தோற்றமும் இல்லை, உடலில் எலும்புகளும் இல்லை. ஆனாலும், இது ஒரு குருத்தெலும்பு
தட்டையான மீன் இனமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான மீன்களுக்கு கண்கள்
உடலின் இருபக்கங்களில் காணப்படும். ஆனால், திருக்கை மீனின் கண்கள் அதன் மேல்
பகுதியிலும், வாய் அதன் அடிப்பகுதியிலும் காணப்படுகின்றன. பொதுவாக, மீன்களுக்கு
துடுப்பு காணப்படுகிறது.
ஆனால், திருக்கை மீனுக்கு அதன் உடலை விட 2 மடங்கு நீளமான
வால் காணப்படுகிறது. உலக அளவில் 220-க்கும் மேற்பட்ட திருக்கை மீன் இனங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. திருக்கை மீனின் தனித்துவம் என்பது அது மற்ற மீன்களை விட
சிறப்பான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. திருக்கை மீனில் வைட்டமின்கள், தாதுக்கள்
மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. மீன் உணவுகளை விரும்பி உண்பவர்களில் பலர்,
திருக்கை மீன் உணவை உண்பது குறைவு.
ஆனால், திருக்கை மீனின் சதைப்பகுதி உண்பதற்கு
ஆட்டின் நெஞ்சு எலும்பு போல மெலிதான எலும்பு மற்றும் சதை இணைந்த இறைச்சி போல
சுவையானது. உலகின் பல்வேறு நாடுகளிலும் மீன் உணவை விரும்பி உண்ணும் பலர், திருக்கை
மீன்களை தேர்ந்தெடுத்து உண்கின்றனர். காரணம், இந்த மீனில் காணப்படும் மருத்துவ
குணங்கள்தான். திருக்கை மீன் இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய், நீரிழிவு மற்றும் பிற
உடல் உறுப்புகளின் அழற்சியை குறைக்கிறது. அவ்வப்போது திருக்கை மீன் உணவை
உட்கொள்ளும்போது தோல் பொலிவு பெறும். கூந்தல் அடர்த்தியாக வளரும். நினைவாற்றல்
அதிகரிக்கும். இந்த மீனில் வைட்டமின்-ஏ சத்து நிரம்பி காணப்படுவதால் கண் பார்வைக்கு
நல்லது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்களும் இருப்பதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இறைச்சி விரும்பிகள் தவறாமல் உண்ண வேண்டிய ஒன்று, திருக்கை மீன்
உணவாகும்.