உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) - முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப்பதிவு 
திரு.ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு)
திரு.ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு)

தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார்! அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்! 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.