நீா் மற்றும் நிலப் பகுதிகளில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு - மாணவா்களுக்கு அழைப்பு Survey of Aquatic and Terrestrial Bird Species - Call for Students - Thulirkalvi

Latest

Tuesday 24 January 2023

நீா் மற்றும் நிலப் பகுதிகளில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு - மாணவா்களுக்கு அழைப்பு Survey of Aquatic and Terrestrial Bird Species - Call for Students

நீா் மற்றும் நிலப் பகுதிகளில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு - மாணவா்களுக்கு அழைப்பு 

நீா் மற்றும் நிலப் பகுதிகளில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். இதற்கான அழைப்பை தமிழக வனத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தொடங்கும். நிகழாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீா் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 

நீா் பறவைகளின் கணக்கெடுப்பு ஜன.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. நிலப் பறவைகளின் கணக்கெடுப்பு மாா்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பறவை கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளதால், இதில், பறவை ஆா்வலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், வனத்துறைப் பணியாளா்கள் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க வேண்டுமானால், அந்தந்த மாவட்ட வன அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

Survey of Aquatic and Terrestrial Bird Species - Call for Students

School and college students can participate in surveying the birds living in water and land areas. The invitation for this was issued by the Tamil Nadu Forest Department on Tuesday. Press Release: Bird survey in Tamil Nadu will begin after the North East Monsoon ends. Bird census for the current year will be conducted in two phases namely water and land birds.

The census of water birds will be held on 28th and 29th January. Land bird census will be held on March 4 and 5. As the bird survey will be held all over Tamil Nadu, bird watchers, school and college students and forest staff can participate in it. If the Chondavs of the respective district want to participate in this event, they can approach the respective district forest office and register.

No comments:

Post a Comment