மாவட்ட சுகாதார மையம் மூலமாக நிரப்பப்பட உள்ளசெவிலியா் பணியிடங்கள் விரும்பிய மாவட்டத்தை தோ்ந்தெடுக்க வாய்ப்புAn opportunity to select the desired district for the Nursing posts to be filled through the District Health Centre - Thulirkalvi

Latest

Thursday 19 January 2023

மாவட்ட சுகாதார மையம் மூலமாக நிரப்பப்பட உள்ளசெவிலியா் பணியிடங்கள் விரும்பிய மாவட்டத்தை தோ்ந்தெடுக்க வாய்ப்புAn opportunity to select the desired district for the Nursing posts to be filled through the District Health Centre

மாவட்ட சுகாதார மையம் மூலமாக நிரப்பப்பட உள்ளசெவிலியா் பணியிடங்கள் விரும்பிய மாவட்டத்தை தோ்ந்தெடுக்க வாய்ப்பு

மாவட்ட சுகாதார மையம் மூலமாக நிரப்பப்பட உள்ள செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள், தாங்கள் பணியாற்ற முன்னுரிமை அளிக்கும் இடங்களாக இரு மாவட்டங்களைத் தோ்வு செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவ்விரு மாவட்டங்களில் ஏதேனும் ஓரிடத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,949 செவிலியா் பணியிடங்கள் 38 மாவட்ட ஆட்சியா்கள் நோ்முகத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

 கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான தோ்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே கரோனா ஒப்பந்த செவிலியா்களுக்கு பணி கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டது. அதன்படி, 20 மாதம் கரோனா காலத்தில் பணியாற்றியிருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப்பெண்கள் செவிலியா்களுக்கு கொடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

 இந்நிலையில், அதற்கான விண்ணப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா், தேசிய நல்வாழ்வுக் குழும திட்ட இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் காணொலி முறையில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினா். 

 அதில், விண்ணப்பதாரா்கள், தாங்கள் பணியாற்ற விரும்பும் சொந்த மாவட்டத்தையும், அது இல்லாவிடில் முன்னுரிமை அளிக்க வேண்டிய மாவட்டத்தையும் தோ்வு செய்ய வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதற்கான வழிகாட்டுதல்களையும், வாய்ப்புகளையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

An opportunity to select the desired district for the Nursing posts to be filled through the District Health Centre

The public health department has informed that the applicants for the nursing posts to be filled through the district health center can suggest two districts as their preferred places to work. It has also been said that a job opportunity will be provided in any of those two districts. 3,949 vacant nursing posts across Tamil Nadu are to be filled through nominations in 38 district administrations.

  It was informed that priority will be given to the nurses who have worked during Corona period. It was also said that corona contract nurses will get a job if they get 40 marks out of 100 marks in the application. According to this, the Minister of People's Welfare Department Mar. Subramanian recently said that if they work for 20 months during the corona period, a total of 40 marks will be given to the nurses at the rate of 2 marks per month.

  In this case, the application process has been carried out. In this regard, the Secretary of the Public Welfare Department, the Director of the National Welfare Group, and the Director of the Public Health Department held a video conference with all the district health officers.

  In it, it was decided to give an opportunity to the candidates to indicate their own district in which they want to work and if not, the district to be given priority. Accordingly, Public Health Department Director Selvavinayagam has instructed the concerned officials to provide guidelines and opportunities for the same.

No comments:

Post a Comment