மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா் Reprinted 108 Rare Bhakti Books - Published by Chief Minister M.K.Stalin - Thulirkalvi

Latest

Thursday 19 January 2023

மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா் Reprinted 108 Rare Bhakti Books - Published by Chief Minister M.K.Stalin

மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

 இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

 இந்தப் பதிப்பகப் பிரிவின் மூலம் முதல் கட்டமாக, தமிழ் மொழி வல்லுநா்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சாா்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டாா்.

 இதைத் தொடா்ந்து இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிக்காலத்தில் இறந்த 10 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா், காவலா், கடைநிலை ஊழியா் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். மேலும், திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகள், அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ரூ.15 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

 பின்னா், ஆணையா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பாா்வையிட்ட முதல்வா் ஸ்டாலின் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்துவைத்தாா். 48 கோயில்களில் விற்பனை: மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் அரிய புத்தகங்கள் அறநிலையத் துறை ஆணையா் அலுவலக புத்தக விற்பனை நிலையம் மற்றும் 48 முதுநிலைத் திருக்கோயில்களின் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.

 இந் நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஆழ்வாா் திருநகா் ரெங்கராமானுஜ ஜீயா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சால அடிகளாா், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், ஸ்ரீவில்லிப்புத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா், சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


Reprinted 108 Rare Bhakti Books - Published by Chief Minister M.K.Stalin

  Chief Minister M.K.Stalin released 108 rare devotional books reprinted with new editions on behalf of the Hindu Religious Charities Department. A new publishing unit has been started in the office of the Commissioner of Charity Department at Nungambakkam, Chennai.

  In the first phase, through this publishing division, selected by Tamil language experts, reprinted and reprinted with new editions, Hindu religion Shantar Devaram, Tiruvasakam, Tirupukazh, Tirupavai, Thiruvembavai, Abirami Anthadi, Nalayira Divyaprabandham, Tamil Nadu Arts, Saivism and Tamil, History of Indian Architecture, Eighteen The release ceremony of 108 rare books including Puranas was held on Thursday at the office of the Commissioner of Charity Department in Nungambakkam, Chennai. Chief Minister Stalin participated in this and published 108 rare devotional books.

  Following this, he issued appointment orders to the heirs of 10 employees who died while working in temples under the management of the Hindu Religious Charities Department for various positions such as Junior Assistant, Guard, Shopkeeper etc. He also reviewed the scrolls, copper plates and other prints found and exhibited in the temples, and the ongoing construction work worth Rs. 15 crores in the charity department office.

  Later, Prime Minister Stalin reviewed the activities of the publishing department operating in the commissioner's office and inaugurated the newly established book outlet there. Sale at 48 Temples: The reprinted and published rare books will be sold at the bookshop of the Office of the Commissioner of Charities and at the spiritual bookshops of 48 senior temples.

  In this event, Minister of Charities Department P.K.Sekababu, Azhwar Thirunagar Renkaramanuja Jaya, Kunrakkudi Ponnambala Adigar, Pheru Aadeenam Santalinga Hospital Adigar, Maylam Pommapuram Aadeenam Sivagnana Palaya Swami, Srivilliputdur Sadagopa Ramanuja Jaya, Legal Council Member, Financial Crisis and Tourism Department, N.A. Principal Secretary B. Chandara Mohan, Commissioner of Charity Department J. Kumaragurubaran and others participated.

No comments:

Post a Comment