அரசுப் பணியாளர்களுக்கு தகுதி (Merit) அடிப்படையில் முதுநிலை (Seniority) நிர்ணயம் செய்து பதவி உயர்வு

0 rajkalviplus
அரசுப் பணியாளர்களுக்கு தகுதி (Merit) அடிப்படையில் முதுநிலை (Seniority) நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் தடைபடும் சமூக நீதி - ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியீடு! 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வு முறையிலே தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலானது சமூக நீதி அடிப்படையிலே இருந்து வந்த நிலையிலே, கடந்த 2019 ஆம் ஆண்டு வரப்பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. G.M. அக்பர் அலி அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைத்து அரசால் ஆணையிடப்படுகிறது. 

3. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு. குழுவின் தலைவரின் பதவிக்காலம் மற்றும் ஆய்வு வரம்பு (Terms of references) ஆகியவற்றை கீழ்காணுமாறு நிர்ணயித்து ஆணையிடப்படுகிறது: i. இக்குழு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். ii. ஆய்வு வரம்பு (Terms of references): தொடக்கம் முதல் தமிழகத்தில் அரசு வேலைகளில் நேரடி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தவர் / பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு 200 புள்ளி சுழற்சி முறை (200 point roster) பின்பற்றப்பட்டு, அவர்களது முதுநிலையானது சுழற்சி முறை அடிப்படையிலும் அந்தந்தப் பிரிவினருக்குள் தகுதியின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம் அரசுப் பணியாளர்களின் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி உயர்வில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், தகுதி (merit) அடிப்படையில் தான் பணி முதுநிலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டி தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு எண்.C.P(C) Diary No.6415/2021 மற்றும் தொகுதி வழக்குகளில், மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 18.04.2023 ஆம் நாளிட்ட தீர்ப்பில் 10.03.2003 அன்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வழியாக தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தகுதி (merit) அடிப்படையில் பணியில் முதுநிலை நிர்ணயிக்கும் படி ஆணையிட்டது. அதனால், பதவி உயர்வில் அரசுப் பணியாளர்கள் அனைத்துப் பிரிவினர்களுக்கும் சமமான பங்களிப்பு கிடைக்கப் பெறாமல் போதுமான சமூகநீதி வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. ஆகையால் ஏற்கெனவே இருந்த நடைமுறைகள், தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவை குறித்து உரிய தரவுகளுடன் ஆழமாக ஆய்வு செய்து, வருங்காலங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் அரசுப் பணிகளில் சமூகநீதியை நிலை நாட்டும் வண்ணம் சட்ட ரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை குழு செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து 3 (மூன்று) மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கும்படி குழு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (iii) குழுவின் கட்டமைப்பு: குழுவிற்கு உதவி செய்ய ஏதுவாக, கீழ்காணும் அலுவலர்கள் / பணியாளர்களை தலைமைச் செயலகத் துறைகளிலிருந்து ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது: (1) பிரிவு அலுவலர் 1 (2) தனிச் செயலர் / நேர்முக உதவியாளர் -1 (3) உதவிப் பிரிவு அலுவலர் -2 (4) உதவியாளர்-1 (5) அலுவலக உதவியாளர்-1 (6)ஓட்டுநர் -1 மேலே வரிசை எண். 1 முதல் 5 வரை உள்ள அலுவலர்கள் / பணியாளர்களை ஒதுக்கீடு செய்து தர மனித வள மேலாண்மை (எச்.கியூவு-அந.I ) துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது. (iv) குழுத் தலைவரின் ஊதியத்தைப் பொறுத்த வரை, அவர் தற்போது பெறும் ஓய்வூதியம் நீங்கலாக, தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நிகரான சம்பளம் மற்றும் இதர படிகள் நிர்ணயிக்கப்படுகிறது. (v) குழுத் தலைவருக்கு மகிழுந்து, அதற்கான எரிபொருள், ஓட்டுநர் மற்றும் தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரும்படி பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. (vi) குழுவின் தலைமையிடம் சென்னை என முடிவெடுக்கப்பட்டுள்ளதால், அதற்கான ஓர் இடத்தினை தேர்வு செய்து அதனை குளிர் சாதன வசதியுடன் கூடிய அலுவலகமாக ஒதுக்கீடு செய்து தரும் படி பொதுப்பணித் துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது. (vii) ण, श्री типот sel (with Wifi connection), scanner with printer மற்றும் எழுது பொருட்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வழங்கும் படி இத்துறையின் (அந.II) பிரிவு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (viii) மரச்சாமான்கள் (furniture) மற்றும் அது தொடர்பான இனங்களை TANSI நிறுவனத்தினடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி குழு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ix) குழுத் தலைவர் மற்றும் அலுவலர்கள் / பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளைப் பெற்று வழங்க ஏதுவாக, கணக்குத் தலைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு, உரிய கருத்துருவினை இத்துறையின் (எஸ்/அந.II) பிரிவு வழியாக நிதித்துறைக்கு அனுப்பி ஏற்படுத்திக் கொள்ளுமாறு குழு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.