தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு Rain likely for 4 days from today in Tamil Nadu and Puduvai - Thulirkalvi

Latest

Friday 20 January 2023

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு Rain likely for 4 days from today in Tamil Nadu and Puduvai

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவையில் 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சனிக்கிழமை (ஜன.21) முதல் ஜன.24 - ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் அதனையொட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

 ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில்அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவில்

Rain likely for 4 days from today in Tamil Nadu and Puduvai

  Chennai Meteorological Center has informed that there is a possibility of rain in Tamil Nadu and Puduwai for 4 days due to the variation in the speed of the east wind. In this regard, the Department of Meteorology issued a notification on Friday: Due to the variation in the speed of easterly winds, from Saturday (Jan. 21) to Jan. 24, light to moderate rain may occur at a couple of places in the coastal districts of Tamil Nadu and adjoining districts and Puducherry, Karaikal. Minimum temperature in interior districts is likely to be 2 to 3 degrees Celsius below normal.

  Light fog is likely at a few places in the early morning. Over the hilly areas of Nilgiris and Coimbatore districts, frost is likely at a few places during the night. The sky will be partly cloudy over Chennai and Phukob areas for the next 48 hours. The maximum temperature will be around 30 degree Celsius and the minimum temperature will be around 21 degree Celsius. Light fog is expected in the morning. Also in this section

No comments:

Post a Comment