வடகிழக்கு பருவ மழை குறையும்: வானிலை மையம் கணிப்பு Northeast Monsoon rains to decrease: Meteorological Center forecast - Thulirkalvi

Latest

Friday 25 November 2022

வடகிழக்கு பருவ மழை குறையும்: வானிலை மையம் கணிப்பு Northeast Monsoon rains to decrease: Meteorological Center forecast

வடகிழக்கு பருவ மழை குறையும்: வானிலை மையம் கணிப்பு Northeast Monsoon rains to decrease: Meteorological Center forecast

சென்னை: நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

 வானிலை மையத்தின்... தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த நவ., 17 முதல் 23 வரை காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 34 மி.மீ., பதிவான அளவு 3 மி.மீ., இது இயல்பை விட 91 சதவீதம் குறைவு 16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. 

22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.அக்.,1 முதல் நவ.,23 வரை காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் பதிவான வடகிழக்கு ... பருவமழையின் அளவு 330 மி.மீ., இயல்பான அளவு 317 மி.மீ., இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம்.

 கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதமாக இருந்த பருவமழையின் அளவு, தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி அமைந்துள்ளது.

நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்....

Chennai: From November 25 to December 8, the Northeast Monsoon is expected to be less than normal in Tamil Nadu, Puducherry and Karaikal, the Chennai Meteorological Department has said.

 Balachandran, head of the Meteorological Center's South Region, said: "Northeast Monsoon rainfall has been less than normal in Tamil Nadu, Puducherry and Karaikal areas from November 17 to 23. This is 91 percent less than normal and 16 districts did not record rain.

22 districts have recorded less than normal. During the period from October 1 to November 23, the Northeast Monsoon rainfall recorded in Tamil Nadu, Puducherry, Karaikal was 330 mm, the normal amount was 317 mm, which is 4 times more than normal. The percentage is high.

 The amount of monsoon rains, which were 17 per cent above normal the week before last, has now dropped to 4 per cent. The maximum and minimum temperatures are normal.

From November 25 to December 8, Northeast Monsoon is expected to be less than normal in Tamil Nadu, Puducherry and Karaikal. This is what he said....

No comments:

Post a Comment