மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரரின் ஆதார் எண்ணை இணைக்கலாமா?Can I link tenant's Aadhaar number with electricity connection number? - Thulirkalvi

Latest

Wednesday 23 November 2022

மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரரின் ஆதார் எண்ணை இணைக்கலாமா?Can I link tenant's Aadhaar number with electricity connection number?

மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரரின் ஆதார் எண்ணை இணைக்கலாமா?Can I link tenant's Aadhaar number with electricity connection number?

 தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக, மின் இணைப்பு எண்களுடன், நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 இது குறித்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர், அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று அச்சத்தில் உள்ளனர். 

 இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா? ஆனால், அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்களும், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணைத்தான் இணைத்துள்ளனர். இந்த நிலையில், நுகர்வோர், தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்.

 இதில் எந்த சிக்கலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களும், தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கவும் மின் வாரிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும், மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

 தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன், அந்த இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன. மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது என்பதே அதற்குக் காரணம். இதையும் படிக்க.. 'நான் அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால் அம்மா இப்படி சொல்வார்? ராகுல் பகிர்ந்த ருசிகரம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதி செய்துள்ளது. 

மேலும், https://adhar.tnebltd.org/adharupload/ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று, மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது. அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.

On behalf of the Electricity Board in Tamil Nadu, it is mandatory for the consumers to link their Aadhaar number with the electricity connection numbers.

 The Tamil Nadu government has issued various online notifications regarding this and facility has been provided to link the Aadhaar number. In this situation, more than one electricity connection holder is afraid of getting all of them registered with the same Aadhaar number.

 Also Read.. How to Link Aadhaar Number with Electricity Connection Number? Is it necessary? However, those who have more than one electricity connection have connected the same phone number to all the electricity connections. In this case, consumers can link a single Aadhaar number with their electricity connections.

 It has been explained that there is no problem. Also, the tenants living in the rented house can link their Aadhaar number with the electricity connection of the house on the electricity board website. Therefore, the Tamil Nadu government has made it clear that renters can also link their Aadhaar number with the electricity connection number.

 It is mandatory for the electricity connections in Tamil Nadu to link their Aadhaar number to the electricity connection holders. People have a lot of doubts about this. This is because linking of Aadhaar number with electricity connection is necessary to get electricity subsidy. Also read.. If you ask 'Am I beautiful', will mother say this? A taste shared by Rahul On behalf of the Tamil Nadu Power Distribution Corporation, a special facility has been made available on the website to link the Aadhaar number to the electricity bill payment website.

Also, a page https://adhar.tnebltd.org/adharupload/ has been created. It has been informed that customers paying e-bills directly can carry a copy of their Aadhaar card and provide the Aadhaar copy while paying e-bills and link the Aadhaar number.

 According to the recent ordinance issued by the Tamil Nadu government, it is necessary for people to link Aadhaar number with electricity connection to get 100 units of electricity subsidy. At the same time, it also announced that the subsidy will not be stopped for those who do not link Aadhaar number.

No comments:

Post a Comment